தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women's Day Special : உலக மகளிர் தினம் : பெண்களின் சுகாதாரம் மற்றும் நிலை – ஒரு அலசல்!

Women's Day Special : உலக மகளிர் தினம் : பெண்களின் சுகாதாரம் மற்றும் நிலை – ஒரு அலசல்!

Priyadarshini R HT Tamil

Mar 08, 2024, 02:57 PM IST

google News
Women's Day Special : உலக மகளிர் தினம் : பெண்களின் சுகாதாரம் மற்றும் நிலை – ஒரு அலசல்!
Women's Day Special : உலக மகளிர் தினம் : பெண்களின் சுகாதாரம் மற்றும் நிலை – ஒரு அலசல்!

Women's Day Special : உலக மகளிர் தினம் : பெண்களின் சுகாதாரம் மற்றும் நிலை – ஒரு அலசல்!

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது."Inspire Inclusion"- சம பங்கு, பெண்களுக்கு அனைத்திலும் கிடைப்பதை உறுதிசெய்வோம் என்பது இந்தாண்டுக்கான மகளிர் தின செய்தி.

கள உண்மை

தமிழகத்தில் கிராமங்களில் கருவுற்ற பெண்கள் மத்தியில் ரத்தசோகையும், உடல் எடைக்குறைவு பிரச்னைகளும் அதிகம் இருப்பதாக தமிழக பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் "முதல் 1000 நாட்கள் வாழ்வு" திட்டத்தில் பதியப்படும் பெண்களில் 50 சதவீதம் பேருக்கு ரத்தசோகையும், உடல் எடைக்குறைவு (பேறு காலத்தில்) பிரச்னைகளும் இருப்பதாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

தாய்மையின்போது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனில், ரத்தசோகையும், உடல் எடைக்குறைவும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்தால் மட்டுமே (பெண்களின் பேறுகால இறப்பு மற்றும் சிறு குழந்தைகளின் இறப்பை குறைக்க முடியும்) பேறுகாலத்தில் பெண்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கிறது என்பதை உறுதிசெய்ய முடியும்.

அதை உறுதிசெய்ய முடியவில்லையெனில், அவர்களுக்கு தனி கவனம் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நலமான குழந்தையை ஈன்றெடுக்க கருவுற்ற பெண், பேறு காலத்தில் 9 கிலோ எடை அதிகரிக்க வேண்டும் என இருந்தும், ஆண்டுக்கு 23 பிரிவுகளில் (Blocks) உள்ள 37,000 கருவுற்ற பெண்கள் போதிய சுகாதாரக் குறியீடுகளை பெறாமல் (ரத்தசோகை, உடல் எடைக்குறைவு போதுமான அளவில் இல்லாமல் இருப்பது) இருப்பதால் அவர்களுக்கு உரிய கவனிப்பைத் தர தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

அரசின் இத்திட்டத்தின் வாயிலாக, கருவுற்ற பெண்கள், இரண்டு ஆண்டு வரை குழந்தைகளின் சரியான வளர்ச்சி மற்றும் பிறவற்றை உறுதிசெய்ய, அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் பாதுகாப்பான குழந்தை பிறப்பு மற்றும் சிறு குழந்தைகளின் சரியான வளர்ச்சி, நல்ல வளரும் பருவத்தினரை உருவாக்குதல் (Healthy Adolescense) போன்றவற்றை உறுதிசெய்ய அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், 50 சதவீதம் கருவுற்ற பெண்களுக்கு ரத்தசோகையும், உடல் எடைக்குறைவும் இருப்பது.

பெண்கள் தங்களது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், குடும்பம் எனும் அமைப்பு அதன் அங்கனத்தினரான, தாய், மனைவி, சகோதரி, பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேணிகாக்க முன்வர வேண்டும் என தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அவர்கள் வலியுறுத்தினாலும்,

அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து கருவுற்ற பெண்களுக்கு கிடைக்காததால் தான் கருவுற்ற பெண்கள் மத்தியில் 50 சதவீதம் பேருக்கு ரத்தசோகையும், உடல் எடைக்குறைவு பிரச்னைகளும் இருப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது.

ரத்தசோகைக்கான மருத்துவ மற்றும் சமூகக் காரணிகளை முறையாகக் கண்டறியாமல், ரத்தசோகையால், உடல் எடைக்குறைவால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் சத்து மாவும், (சத்துக்குறைவு ஏன் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அவற்றை களையாமல்) இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை மட்டும் (இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டிற்கான மருத்துவ மற்றும் சமூக காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை களையாமல்) வாரிக்கொடுப்பது மற்றும் பூச்சிக்கொல்லி, ஆங்கில மருந்து மாத்திரைகள், குடிநீரில் ஈயத்தின் அளவு அதிகரிப்பது மற்றும் பிற வேதிப்பொருட்கள் உடலில் புகுந்து, அவற்றால் ஏற்படும் ரத்தசோகை பிரச்னைகளை முறையாக ஆராயாமல், இவை அனைத்திற்கும் பயனை அளிக்காத இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை மட்டும் கொடுப்பது எப்படி சரியாகும்?

பெருவாரியான கிராம மக்கள் செல்லும் ஆரம்ப சுகாதார மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகைக்கான காரணங்களை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதை மேம்படுத்தாமல், பெண்களை குறைகூற முடியாது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த பீரிதாரெட்டி "மருத்துவ ஆராய்ச்சிகளில் பெண்களை பற்றியான விரிவான ஆய்வுகளை (ஆண்களுக்கு மேற்கொள்ளுவதைப் போல்) மேற்கொள்வதில்லை என்றும், பெண்கள் உடம்பு சிலசமயம் மருந்துகளுக்கு வேறுபட்டு வினைபுரிவதால், மருத்துவ ஆய்வுகள் பெண்கள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். இதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டாமா?

தமிழக அரசு பல ஆண்டுகளாக ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைய நடவடிக்கைகள் எடுத்தும், அவை பெருமளவு பலனை அளிக்கவில்லை என்பதே, கள உண்மை என்பதால், அதற்கான காரணங்களை முறையாக ஆராய்ந்து, குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நீக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுப்பது சிறப்பாக இருக்கும்.

தற்போதும் கூட கருவுற்ற 50 சதவீதம் பெண்கள் மத்தியில் ரத்தசோகையும், ஊட்டச்சத்து குறைபாடும் இருப்பது,"எல்லார்க்கும் எல்லாம்" எனும் சமூகநீதியை கேள்விக்கு உள்ளாக்குகிறது.?

தமிழக அரசு விழித்துக்கொண்டு கருவுற்ற பெண்கள் மத்தியில் ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமா?

சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற பதவிகளில் பெண்களின் நிலை -

பெண்களுக்கு சட்டமன்ற மற்றும் பாராளுமன்றங்களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது பேசுபொருளாக இருந்தாலும், கள உண்மை வேறாக உள்ளது.

ஓராண்டு முன் லோக்சபாவில் பெண் MPக்களின் சதவீதம் 14.94 சதவீதம் மட்டுமே.

2019ல் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் MPக்களின் எண்ணிக்கை - 7.69 சதவீதம் மட்டுமே. (இந்திய சராசரியை விட தமிழக அளவு குறைவு)

2022ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, தமிழக சட்டமன்றத்தில் தமிழக பெண்களின் சதவீதம் வெறும் 5.13 சதவீதம் மட்டுமே. (இந்தியாவில் 21ம் இடத்தில் தமிழகம் உள்ளது)

தமிழகத்தில் 205 தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, ஆண் வாக்காளர்களை விட அதிகம்.

தமிழகத்தில் உள்ளூர் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளில், மாவட்ட செயலாளர்களாக எத்தனை பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?

பாராளுமன்றத் தேர்தல்களில் 33 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு என அமல்படுத்தாத வரை பெண் MPக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலிலாவது, தமிழக அரசியல் கட்சிகள் 33 சதவீதம் பெண் MPக்களை வேட்பாளர்களாக களம் இறக்குமா?

பெண்களுக்கு சம உரிமை மற்றும் பங்கீடு என்பது வெறும் பேச்சாக இல்லாமல், செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி