தினமும் ஏலக்காய் தண்ணீர் பருகுவதால் செரிமானம் முதல் என்னனென்ன நன்மைகள் கிடைக்கிறது?
Nov 01, 2024, 05:52 AM IST
தினமும் ஏலக்காய் தண்ணீர் பருகுவதால் செரிமானம் முதல் என்னனென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பாருங்கள்.
ஏலக்காய் தண்ணீரை பருகுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன. ஏலக்காய், ஆங்கிலத்தில் எலாச்சி அல்லது கார்டமாம் என்று அழைக்கப்படுகிறது. இதன் நறுமணத்துக்கு பாரம்பரிய மருத்துவத்தில் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. ஏலக்காயை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை பருகுவது, உங்கள் உடலுக்கு புத்துணர்வு தரும் பானமாக உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த டானிக் ஆகிறது. ஏலக்காய் தண்ணீரை தினமும் பருகுவது உங்கள் உடல் நலனுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
ஏலக்காய் தண்ணீர் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. வாயுத்தொல்லை, செரிமான கோளாறுகளையும் போக்குகிறது. ஏலக்காயில் உள்ள செயல்படக்கூடிய உட்பொருட்கள் பித்தத்தைத் சுரக்கச் செய்கிறது. இதனால் உணவு நன்முறையில் உடைக்கப்பட்டு, செரிமானத்தை எளிதாக்குகிறது. எனவே ஏலக்காய் தண்ணீரை சாப்பிடுவதற்கு முன்னர் பருகுவதால், செரிமான பிரச்னைகளுக்கு நன்மை தருகிறது.
சுவாசத்துக்கு இயற்கை முறையில் புத்துணர்வு தருகிறது
புத்துணர்வு தரும் இதன் குணங்கள், ஏலக்காயை இயற்கை மவுத் ஃபிரஷ்னராக மாற்றுகிறது. ஏலக்காய் தண்ணீரில் பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது உங்களின் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. உங்களின் சுவாசத்தை புத்துணர்வுடன் வைக்கிறது. இது ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. எனவே தினமும் ஏலக்காய் தண்ணீரை பருகுவது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
ஏலக்காயில் உள்ள வெப்பம் உருவாக்கும் குணங்கள், உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகரிக்கிறது. ஏலக்காய் தண்ணீரை தினமும் பருகுவது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை பராமரிக்கவும், கொழுப்பு குறைக்கவும் பயன்படுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கும் இயற்கை ஊக்கியாகும். இது ஆற்றலை இழக்க அனுமதிப்பதில்லை.
இதய ஆரோக்கியம்
ஏலக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பொட்டாசியச் சத்துக்களும் அதிகம் உள்ளது. இவையிரண்டும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைப் போக்குகிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. எனவே ஏலக்காய் தண்ணீரை பருகுவதால், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் ரத்த அளவுகளை சமப்படுத்துகிறது.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
ஏலக்காயில் உள்ள சிறுநீர்ப்பிரிப்பு குணங்கள், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. சிறுநீரகம் மற்றும் வயிற்றில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. ஏலக்காய் தண்ணீர் கழிவுகளைப் போக்குகிறது. உடலை சுத்தம் செய்கிறது. சருமத்தை சுத்தமாக்குகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள கழிவுகளைப் போக்குவதற்கு உதவுகிறது.
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஏலக்காயில் உள்ள இதமான குணங்கள், சுவாச மண்டலத்துக்கு இதமளிக்கிறது. இதனால் சுவாசம் மேம்படுகிறது. ஏலக்காய் தண்ணீர் நுரையீரலில் உள்ள நெரிசலைப் போக்குகிறது. நுரையீரல் ஆரோக்கியத்தைப் போக்குகிறது. சளியைப் போக்குகிறது. சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் வீக்கம் போன்ற சுவாச மண்டல உபாதைகளில் உழல்பவர்களுக்கு ஏலக்காய் ஒரு தீர்வு. சூடான தண்ணீரில் ஏலக்காயை ஒரு டம்ளர் பருகினால் அது உங்களுக்கு இதமளிக்கிறது. சுவாசத்தை எளிதாக்குகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஏலக்காய் தண்ணீர் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் வயோதிகம் விரைவில் ஏற்படாமல் தடுக்கிறது. இது உங்கள் சருமத்தில் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. கரும்புள்ளிகள் மற்றும் மருக்களைப் போக்குகிறது. ஏலக்காய் தண்ணீரை பருகுவது உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. சரும பளபளப்பைப் போக்குகிறது.
மனஅழுத்தத்தைப் போக்குகிறது
இதன் அமைதிப்படுத்தும் இயற்கை உட்பொருட்கள், ஏலக்காயை, மனப்பதற்றத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டதாக மாற்றுகிறது. இது உங்களின் மனஅழுத்தத்தைப் போக்குகிறது. மனஅமைதியை ஏற்படுத்துகிறது. எனவே ஏலக்காய் தண்ணீரை பருகினால், அது உங்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கிறது. இதன் இதமளிக்கும் மற்றும் அமைதிப்படுத்தும் குணங்கள், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் அமைதிப்படுத்துகிறது. இதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்தால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும்.
டாபிக்ஸ்