தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Arai Keerai Benefits: ஆண்களுக்கு ஆனந்த வாழ்வு தரும் அரைக்கீரை.. ஒரு வாரம் சாப்பிட்டால் இந்த நோய் வராதா?

Arai Keerai Benefits: ஆண்களுக்கு ஆனந்த வாழ்வு தரும் அரைக்கீரை.. ஒரு வாரம் சாப்பிட்டால் இந்த நோய் வராதா?

Aarthi Balaji HT Tamil

Jan 23, 2024, 06:04 AM IST

google News
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி தயாரிக்கப்படும் இந்த சைவ சமையல் பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி தயாரிக்கப்படும் இந்த சைவ சமையல் பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.

அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி தயாரிக்கப்படும் இந்த சைவ சமையல் பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.

அரைக்கீரை… பெயருக்கு தான் இது இப்படி சொல்லப்படுகிறதே என்று தவிர இந்த கீரையில் அனைத்துவிதமான சத்துக்களும் நிறைந்து உள்ளது. இது அனைத்துவிதமான மக்களுக்கும் ஏற்ற கீரை ஆகும்.

இது கட்டையான தடிமான வேரில் பல கிளைகள் விட்டு தரை, அரையடியிலிருந்து ஒரு அடி உயரம் வரை புதர்போல் வளரும் இயல்பு தண்மை கொண்டது.

இலையின் மேல்பாகம் பச்சை நிறத்திலும், கீழ்பாகம் சிவப்பும் நீலமும் கலந்தாற் போல இருக்கும். ஒரு முறை இக்கீரையை பயிரிட்டால் அது பல மாதங்களுக்கு விளைச்சலை தரும்.

எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான - உன்னதமான கீரை இது. பல வியாதிகளைப் போக்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு. எந்த வியாதி கொண்டவர்களும் தாராளமாக தைரியமாக இந்த கீரையை சாப்பிடலாம். அரைக்கீரையை தினம் தினம் சாப்பிட்டு வந்தால் தேகத்தில் வெப்பம் ஏறும் என்பார்கள். இது தவறு. இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது.

அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி தயாரிக்கப்படும் இந்த சைவ சமையல் பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு தண்மை கொண்டது. 

உடல் வலி குறையும்

சிலர், சிறிதளவில் வேலை செய்தாலும் உடம்பு முழுக்க வலி எடுக்கிறது என்பார்கள். இவர்களுக்கு அரைக்கீரை உதவியாக இருக்கும். மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு, அரைக்கீரையோடு சேர்த்து பொரியல் செய்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டுவந்தால் உடல் வலி போகும். 

அரைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சேர்த்து, தினசரி உண்போர்க்கு வாயுத் நீங்கிவிடும்.

ருசி தன்மை

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு ருசியே உணவில் தெரியாது. எதைச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரியாக மண்ணைத் தின்றதைப் போலவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு, புளியையும் சேர்த்துக் கடைந்து ஒரு வாரத்திற்கு மதிய வேளையில் நாளடைவில் சாப்பிட்டு வந்தால் ருசி தெரியவரும்.

சளி, இருமல் தொல்லை நீங்கும்

கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கடைந்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் தொல்லை நீங்கிவிடும்.

பசி 

பலருக்கு பசியே எடுக்காது. மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஏதோ சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு சீரகத்தைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பசி எடுக்கும். கடைந்த கீரையை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடுவது நல்லது.

பிரசவித்த பெண்களுக்கு உதவும்

பிரசவித்த பெண்கள் இயல்பாக சோர்வாக இருக்கும். அவர்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது. இயற்கை நெய் விட்டு, கீரையை வதக்கியோ, கடைந்தோ சாப்பிட்டுவந்தால் பலம் ஏறும். குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும்.

ஆண்மை இழந்தவர்களுக்கு

இன்றைய நவ நாகரிக யுகத்தில் திருமணமாகாத இளைஞர்களும் சரி. திருமணமானவர்களும் சரி.. அளவுக்கு மீறிய ‘உடல் தொடர்பு’ இக்கீரையை உண்பதால் ஆண்மை இழந்தவர்களுக்கு திருப்பி கொண்டு வரும் சக்தி உண்டு.

வளரும் குழந்தைகளுக்கு

வளரும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்கவும், புத்திசாலித்தனத்துடன் பயிலவும், உடல் பலத்துடன் வளரவும், அரைக்கீரை கொடுக்க வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி