தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss Tips : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்!

Weight Loss Tips : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்!

Priyadarshini R HT Tamil

Aug 07, 2024, 01:52 PM IST

google News
Weight Loss Tips : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமெனில், உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவும் கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
Weight Loss Tips : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமெனில், உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவும் கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

Weight Loss Tips : உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றியடைய வேண்டுமெனில், உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவும் கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

உடல் எடை குறைப்பு பயணத்துக்கு உதவக்கூடிய டிப்ஸ்கள் குறித்து பார்த்துவருகிறோம். அதில் நீங்கள் மேலும் தெரிந்துகொள்ளவேண்டியவை என்னவென்று பாருங்கள்.

சாப்பிடுவதில் கவனம்

கவனமாக சாப்பிட்டாலே உங்கள் எடை குறைப்பு பயணத்தில் நீங்கள் சில மைல்கற்களை எட்டலாம். நீங்கள் ஏன், எப்படி, எப்போது, எங்கே, என்ன சாப்பிடவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். அது உங்கள் உடலுக்கு வலு சேர்க்கும்.

நீங்கள் கவனமாக சாப்பிடும்போது, மெதுவாக உங்கள் உணவை சவித்து சாப்பிடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு உணவின் சுவையை உணர முடிகிறது. உங்களுக்கு உணவு உண்டபின் வயிறு நிறைவதைவிட சாப்பிட்ட திருப்தி நல்லது. இயற்கை மற்றும் கொழுப்புகள் குறைந்த உணவுகள் மட்டும் ஆரோக்கியமான உணவு தேர்வாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த உணவு கலோரி அளவுகளுக்கு ஏற்ற மதிப்புமிக்கதா?

இது பசியைப்போக்குமா?

இதில் உள்ள உட்பொருட்கள் ஆரோக்கியமானதா?

அதில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது?

சாப்பிட்ட தூண்டுவதும், கட்டுப்பாடும்

சமூக மற்றும் சுற்றுச்சூழல்கள், நம்மை தேவையின்றி அதிகமாக சாப்பிடத்தூண்டும். எடுத்துக்காட்டாக, சிலர் டிவி பார்க்கும்போது அதிகம் சாப்பிடுவார்கள். சிலர் ஒரு துளி கூட சாப்பிட விரும்பமாட்டார்கள். எனவே உங்களை எது சாப்பிட தூண்டுகிறது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள். எனவே அதில் இருந்து சிறிது விலகியிருங்கள்.

திட்டமிடுங்கள்

உங்கள் சமையலறையில், எப்போதும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டும் நிரப்பிக்கொள்ளுங்கள். எனவே உங்களுக்கான உணவுத்திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு உடல் எடை குறைப்பு பயணத்தில் உதவும்.

உங்கள் சமையலறையை கட்டாயம் குப்பை உணவுகள் மற்றும் பதப்பத்தடுப்பட்ட உணவுகள் இல்லாத ஒன்றாக மாற்றுங்கள். எளிமையான, ஆரோக்கியமான உணவுகள் நிறைந்ததாக உங்கள் சமையலறையை மாற்றுங்கள்.

இதனால், நீங்கள் திடீரென சாப்பிட நேரும்போது கூட ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுவீர்கள். மேலும் விருந்துகள் மற்றும் உணவு விடுதிகளில் சாப்பிடச் செல்வதற்கு முன்னரும் திட்டமிடுங்கள். அப்போது நீங்கள் உணவு உட்கொள்ளும் அளவு கட்டுப்படுத்தப்படும்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு

உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்துக்கு உங்களின் அன்பானவர்களின் ஆதரவு தேவை. சிலர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைப்பார்கள். அவர்களுடன் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்ய வலியுறுத்துவார்கள். ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். அவர்களின் வளர்ச்சி குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் உற்சாகம் அளிப்பார்கள்.

மற்ற ஆதரவு கிடைக்கும் இடங்கள்,

நேர்மறையான சமூக நெட்வொர்க்

தனிப்பட்ட அல்லது குழு கவுன்சிலிங்

உடற்பயிற்சி கிளப்கள் அல்லது நண்பர்கள்

வேலை பணியாளர்கள் என நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

நேர்மறையாக இருங்கள்

உடல் எடை குறைப்பு என்பது மெதுவாக நடக்கும் ஒன்று ஆகும். நீங்கள் அதிக உடற்பயிற்சிகள் செய்தும், உங்களுக்கு உடல் எடை குறையவில்லையென்றால், நீங்கள் ஊக்கமிழக்கவேண்டாம். நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உடனேயே கிடைத்துவிடாது.

நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால் சில நாட்கள் மிகவும் மோசமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். ஏனெனில் உடல் எடையை குறைப்பதும், அதை பராமரிப்பதும் கடினமான விஷயங்கள். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே ஒருவரால் உடல் எடையை குறைக்க முடியும். அத்தனை கடினமானது உடல் எடை குறைப்பு என்பது, சிலருக்கு, மாற்றங்களும் தேவைப்படும்.

அதையும் அவர்கள் அவ்வப்போது செய்து முன்னேறிச்செல்லவேண்டும். உடற்பயிற்சி முறைகள், உணவு என எந்த மாற்றத்தையும் உடனே செய்துவிடவேண்டும். நீங்கள் நேர்மறையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். ஒரு வெற்றிகரமான உடல் எடை குறைப்பு பயணத்தில் தடைகளை கடந்து வெற்றி பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி