தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss Tips: பலகாரங்கள் அதிகமாக சாப்டீங்களா..தீபாவளிக்கு பிறகு உடல் எடையை குறைப்பது எப்படி?- ஈஸி டிப்ஸ் இதோ!

Weight Loss Tips: பலகாரங்கள் அதிகமாக சாப்டீங்களா..தீபாவளிக்கு பிறகு உடல் எடையை குறைப்பது எப்படி?- ஈஸி டிப்ஸ் இதோ!

Karthikeyan S HT Tamil

Nov 12, 2023, 02:17 PM IST

google News
தீபாவளி பண்டிகைக்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி பார்ப்போம்.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி பார்ப்போம்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பட்டாசும் பலகாரங்களும் தான் முதன்மையானதாக இருக்கும். தீபாவளி தினத்தன்று அதிகாலையில் துயில் எழுந்து, எண்ணெய் குளியலை முடித்த பிறகு புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

பண்டிகைகள் என்றாலே உணவு வகைகள் பலவிதமான இனிப்புகள் மற்றும் அதிக கலோரி நிறைந்த உணவுகள் இடம்பெற்றிருக்கும். இதனால் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு கலோரி உட்கொள்ளுவதை கட்டுபாட்டில் வைத்து கொள்வது கடினமாக இருக்கும். குறிப்பாக தீபாவளி தினத்தில் தவிர்க்க முடியாத சூழலில் அதிக இனிப்புகளை சாப்பிட்டுவிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற அபாயம் பலருக்கும் உண்டு. கவலையை விடுங்க..தீபாவளிக்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிட்டால் அதை எவ்வாறு குறைக்கலாம் என்பதற்கான சில டிப்ஸ்கள் இதோ..!

ஒரே வேளையில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பாடு மட்டுமல்ல மற்ற நொறுக்கு தீனிகளையும் குறைவாகவே உட்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு 1 மணி நேரத்திற்கு முன்பு பழங்கள், சூப், ஜூஸ் என ஏதாவது ஒன்றை குறைவான அளவு எடுத்துக்கொள்ளவும். அது அதிகம் உணவு உட்கொள்வதை தவிர்க்க உதவும்.

சமச்சீரான உணவுகளை சாப்பிடுவது அதிக கலோரிகள் உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவும். கலோரிகள் குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் எடை அதிகரிக்காது. நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிக்கலாம். அதேவேளையில் ஒரே நேரத்தில் அதிகம் தண்ணீர் பருகுவதை தவிர்க்கவும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்ல பலனை தரும். சில நேரங்களில் தாகம் ஏற்படுவதை பசி என்று தவறாக நினைக்கலாம். உடலில் நீரேற்றம் சரியாக இருந்தால் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகள் சுமூகமாக நடைபெறும்.

அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு வாரத்திற்குள் 5 முதல் 10 கிலோ எடையை குறைக்க முயற்சிப்பது பெரும் ஆபத்தானது. இத்தகைய இலக்குகளை தவிர்ப்பது நல்லது. நம்மால் முடிந்த இலக்கை நிர்ணயித்து அதை மட்டும் முயற்சிக்கவும். அப்படி படிப்படியாக உடல் எடை குறைப்பு முயற்சியில் கவனம் செலுத்துவது நல்ல பலனை தரும். ஏற்கனவே உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது நல்லது.

தீபாவளிக்கு பின்பு உணவு, உடற்பயிற்சி, உடல் எடை இந்த மூன்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்காணித்து, உணவுப் பழக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். உடல் எடை அதிகரித்திருந்தால் அதை குறைப்பதற்கு இன்னும் கடுமையான பயிற்சிகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி