நீங்கள் விரும்பி சாப்பிடும் ஸ்டீர்ட் ஃபுட்கள் எப்படி உங்களுக்கு எமனாக மாறுகிறது? தெருவோர உணவுகளில் இருக்கும் ஆபத்துகள்
Nov 20, 2024, 05:37 PM IST
பானிபூரி முதல் சாட் வகை உணவுகள் வரை தெருவோர உணவுகளில் இருக்கும் ஆபத்துகள், நீங்கள் விரும்பி சாப்பிடும் ஸ்டீர்ட் ஃபுட்கள் எப்படி உங்களுக்கு எமனாக மாறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சில நேரங்களில் நாம் விரும்பும் விஷயங்கள், நம்மை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கலாம். எச்சில் ஊறவைக்கும் சுவையான ஸ்டீரிட் ஃபுட்களை தேடி தேடி சாப்பிடுகிறோம். இந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் பலரும் உள்ளார்கள்.ஸ்டீரிட் ஃபுட் உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சியை தரும் விதமாக அவர்கள் விரும்பு சாப்பிடும் அந்த உணவுகள் சுவையுடன், பல்வேறு விதமான நோய்கள் பாதிப்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
புனேவை தேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையின், மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரேகா ஷர்மா, "இந்திய தெருவோர உணவுகள் நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையின் துடிப்பான பிரதிபலிப்பாகும். ஒரு இந்தியராக இருப்பதால், தெரு உணவுகளை எதிர்ப்பது கடினம். இருப்பினும், அவை சரியாகக் கையாளப்படாவிட்டால், உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது." என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய தெருவோர உணவுகளால் ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் இதர உடல்நல பிரச்னைகளை பார்க்கலாம்
பானி பூரி
பானிபூரியில் பயன்படுத்தப்படும் நீர் பெரும்பாலும் உள்ளூர் குழாய்கள் அல்லது சந்தேகத்துக்குரிய ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது, இது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகளை கொண்டு செல்லக்கூடியது. தண்ணீரை வடிகட்டி அல்லது சுத்திகரிக்கவில்லை என்றால், அது ஈ.கோலி, சால்மோனெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும்.
வட பாவ்
அறை வெப்பநிலையில் அதிக நேரம் விடப்படும் சட்னி அல்லது பஜ்ஜியை முறையற்ற முறையில் சேமித்து வைப்பது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் அல்லது க்ளோஸ்ட்ரிடியம் பெர்ஃபிரிங்ஜென்ஸிலிருந்து உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
சமோசா
சமோசாக்கள், சரியாக சமைக்கப்படாவிட்டாலோ அல்லது பாதுகாப்பான வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படாவிட்டாலோ, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும். குறிப்பாக இதில் நிரப்ப பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு அல்லது எண்ணெய்கள் போன்ற காலாவதியான பொருட்களை முறையற்ற கையாளுதல் அல்லது பயன்படுத்துவது சால்மோனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரியாக்களால் மாசுபடுவதற்கு வழிவகுக்கும்.
கெபாப்
வேகவைக்கப்படாத இறைச்சி அல்லது தவறான வெப்பநிலையில் சேமிக்கப்படும். இறைச்சி சால்மோனெல்லா, கேம்பிலோபேட்ரியா அல்லது லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்களை வளர்க்கும். இதனை உட்கொள்வதால் உணவு விஷம் ஏற்படும்.
சாட் உணவுகள்
சாட் பொதுவாக அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் விடப்படும் பொருட்களுடன் பரிமாறப்படுகிறது. இது தயிர் மற்றும் சட்னிகள் போன்ற பொருட்களில் பாக்டீரியாவுடன் மாசுபடுவதற்கு வழிவகுக்கும். இதை உட்கொள்வதால் உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.
உணவை நுகர்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- தெரியாத தெருவோர உணவுக் கடைகளில் இருந்து சாப்பிட வேண்டாம்.
- குறிப்பாக புதிய நகரத்துக்கு அல்லது பகுதிக்கு செல்லும்போது. நல்ல, சுகாதாரமான உணவுக் கடை விற்பனையாளர்களைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரிக்கவும். கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும்
- விற்பனையாளரின் நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான நீர் ஆகியவற்றைக் கவனிக்கவும்
தெருவோர உணவு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்
- தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உணவின் சுகாதாரத் தரங்களைப் பராமரிக்கவும்
- உணவுகளை சுத்தமான தண்ணீரால் தயாரிக்கப்பட வேண்டும்
- வெட்டப்பட்ட பழங்களை விற்க வேண்டாம் - மாசுபடுவதற்கான அதிக ஆபத்து உள்ளது
- இறைச்சி நன்கு சமைக்கப்பட வேண்டும் மற்றும் சரியான பாதுகாப்பான உணவைக் கையாள வேண்டும்
- குறிப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்
டாபிக்ஸ்