தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அதிக நேரம் நின்றால் இதய நோய் ஆபத்தா? புதிய ஆய்வில் தகவல்! தெளிவான விளக்கம்!

அதிக நேரம் நின்றால் இதய நோய் ஆபத்தா? புதிய ஆய்வில் தகவல்! தெளிவான விளக்கம்!

Suguna Devi P HT Tamil

Oct 24, 2024, 04:51 PM IST

google News
அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, பலர் அடிக்கடி நின்று பணியாற்றும் வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, பலர் அடிக்கடி நின்று பணியாற்றும் வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.

அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, பலர் அடிக்கடி நின்று பணியாற்றும் வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.

அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, பலர் அடிக்கடி நின்று பணியாற்றும் வேலைகளுக்குச் சென்றுள்ளனர். உட்காருவது, நிற்பது என மாறி மாறிச் செய்வது உடலின் சமநிலையான தோரணைக்கு உதவுவதாகவும், நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு புதிய ஆய்வு இந்த புதிய நடைமுறையில் விரும்பத்தகாத ஒன்றைக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நிற்பது இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 

அதிக நேரம் நிற்பதால் 

சிட்னியின் நியூ யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள், உட்கார்ந்திருப்பதை விட அதிகமாக நிற்பது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது எனத் தெரிவித்துள்ளனனர். கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட நோய்களுடன் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்ற நிற்பதில் தொடர்புடைய சுற்றோட்ட சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறிந்தனர். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்காக லண்டனை சேர்ந்த 83,013பேரிடம் இருந்து  ஏழு முதல் எட்டு ஆண்டிற்கான தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். 

"உட்கார்ந்த வாழ்க்கை முறையின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்வதற்கு அடிக்கடி எழுநந்து நிற்பது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இது கணினியில் வேலை செய்பவர்கள், ஓட்டுநர் பணி புரிபாவர்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆகியோருக்காக கூறப்படுகிறது. இதற்கு மாறாக நீண்ட நேரம் நின்று வேலை பார்க்கும் சில்லறை வணிகம் போன்ற பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அதிக நேரம் நின்றிருப்பது அவர்களது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

 நிற்பது ஆரோக்கியமானதல்ல 

முக்கிய செய்தி என்னவென்றால், நீண்ட நேரம் நிற்பது மற்றபடி உட்கார்ந்த வாழ்க்கை முறையை ஈடுசெய்யாது மற்றும் சிலரின் இருதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக நிற்பது காலப்போக்கில் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தாது மற்றும் உண்மையில் சுழற்சி சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்" என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் மேத்யூ அஹ்மதி கூறினார்.

நீண்ட நேரம் நிற்பதை குறைத்தல்

இதேபோல், நீண்ட நேரம் நிற்பவர்கள், அடிக்கடி உட்காருவது அவர்களின் கீழ் முதுகு மற்றும் கால்களில் உள்ள அழுத்தத்தை போக்க உதவும். சரிசெய்யக்கூடிய மேசைகள் அல்லது சிட்-ஸ்டாண்ட் பணிநிலையங்களைப் பயன்படுத்துவது, உட்காருவதற்கும் நிற்பதற்கும் இடையில் மாறி மாறி செயல்பட மக்களை ஊக்குவிக்கிறது. இது உடலின் தோரணை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நடைபயிற்சி, கால்களை நீட்டுதல் அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகள், அசைவின்மையின் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும், பொது நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி