தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Snack Recipe : ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்! கடையில் வாங்காமல் வீட்டிலே செய்யலாம்!

Snack Recipe : ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்! கடையில் வாங்காமல் வீட்டிலே செய்யலாம்!

Priyadarshini R HT Tamil

Aug 19, 2024, 01:01 PM IST

google News
Snack Recipe : ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம், கடையில் வாங்காமல் வீட்டிலே செய்யலாம். இதை தினமும் கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்லது.
Snack Recipe : ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம், கடையில் வாங்காமல் வீட்டிலே செய்யலாம். இதை தினமும் கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்லது.

Snack Recipe : ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம், கடையில் வாங்காமல் வீட்டிலே செய்யலாம். இதை தினமும் கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்

தோல் உரித்த வேர்க்கடலை – ஒரு கப்

பொட்டுக்கடலை – ஒரு கப்

கருப்பு எள் அல்லது வெள்ளை எள் – ஒரு கப்

பேரிச்சை பழம் – 10

நாட்டுச்சர்க்கரை – ஒரு கப்

ஏலக்காய் – 2

செய்முறை

தோல் உரித்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள்ளு ஆகிய அனைத்தையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை, பேரிச்சை பழம், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்தப்பொடியை நெய் தடவி லட்டுகளாக பிடித்துவைத்துக்கொள்ளவேண்டும். இதை உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு முறை ஸ்னாக்ஸ் கேட்கும்போதும், எடுத்துக்கொடுங்கள். இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகும். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டால் கடையில் எதையும் வாங்கிக்கொடுக்க வேண்டாம். இவற்றை செய்து கொடுத்து அசத்தலாம்.

நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது.

கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.

ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

கடலை மூளைக்கு மிகவும் நல்லது. கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.

பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது.

எள்ளின் நன்மைகள்

நார்ச்சத்துக்கள் நிறைந்ததுள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது.

கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்கிறது.

தாவர புரதத்தின் ஊட்டச்சத்து கூடமாக எள்ளு உள்ளது.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

வீக்கத்துக்கு எதிராக போராடி, அதை குறைக்கிறது.

வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது.

ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது.

ஆர்த்ரடிக் மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உதவுகிறது.

பொட்டுக்கடலையின் நன்மைகள்

பொட்டுக்கடலையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இது இந்தியாவில் பரவலாக விரும்பி உண்ணப்படும் ஒரு ஸ்னாக். இதை நீங்கள் தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடலாம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது லோ கிளைசமிக் இன்டக்ஸ் உணவுகளில் உள்ளது.

அதனால் இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இந்திய சமையலறையில் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

புரதச்சத்துக்கள் நிறைந்தது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்கிறது.

புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி