Siruvani Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல்! சிறுவாணி சிக்கன்! இதை எப்படி செய்வது என்று பாருங்களேன்!
Jul 12, 2024, 03:46 PM IST
Siruvani Chicken : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல், சிறுவாணி சிக்கன். இதை எப்படி செய்வது என்று பாருங்களேன். அது தெரிந்தால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
துவரம் பருப்பு கலந்து செய்யும் சிறுவாணி சிக்கன் ரெசிபி சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? இதோ ரெசிபி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
பருப்பு கலந்து சிக்கன் செய்ய முடியுமா என்று நீங்கள் ஆச்சர்யப்படவேண்டாம். அதுவும் செய்யமுடியும்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – கால் கப்
சிக்கன் – கால் கிலோ (எலும்பு இல்லாதது)
சின்ன வெங்காயம் – 15 (முழுதாக) 15 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10
வர மிளகாய் – 8
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
பருப்பை குக்கரில் வைத்து அல்லது நேரடியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துவிடவேண்டும்.
கழுவி சுத்தம் செய்த சிக்கனை சிறு துண்டுளாக்கிக் கொள்ளவேண்டும்.
அதில் முழுதாக வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் 4 வரமிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இது துவையல் போல் இருக்கும்.
இதை சிக்கனில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.
கடாயை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து, எஞ்சியுள்ள 4 வரமிளகாயை கிள்ளியும், கறிவேப்பிலையுடன் சேர்க்கவேண்டும். அனைத்தும் பொரிந்து வந்தவுடன், ஊறவைத்துள்ள சிக்கன் சேர்க்கவேண்டும்.
இதற்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பருப்பு தண்ணீரை மட்டும் முதலில் சேர்த்து சிக்கனை நன்றாக வேகவிடவேண்டும். சிக்கன் வெந்தவுடன் வெந்த பருப்பை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பர் சுவையில் சிறுவாணி சிக்கன் தயார்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்ட என டிபஃனுடனும், சாதத்துடனும் சேர்த்துக்கொண்டு சாப்பிடலாம். வித்யாசமான சுவையில் இருக்கும்.
சிக்கன் வாங்கிவிட்டு வீட்டில் கரம் மசாலா, தேங்காய் இல்லாவிட்டால் கவலையே வேண்டாம். இந்த வித்யாசமான சுவை கொண்ட சிறுவாணி சிக்களை சமைத்து அசத்துங்கள். அனைவரும் உச்சுக்கொட்டி சாப்பிடுவார்கள்.
குறிப்பாக காரம் அதிகம் விரும்பாத குழந்தைகள் இந்த சிறுவாணி சிக்கனை விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் பருப்பு கலந்து செய்வதால், இதில் அதிகளவில் காரம் தெரியாது. பெரியவர்களுக்கும் பிடிக்கும். எனவே இந்த சிறுவாணி சிக்கனை இந்த ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
டாபிக்ஸ்