Shrink Your Belly : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம்! தொப்பை சுருங்குவது கண்கூடாகத் தெரியும்!
Jul 18, 2024, 06:45 AM IST
Shrink Your Belly : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் பருகிவிட்டு, போதிய அளவு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு உட்கொண்டால் போதும். உங்கள் தொப்பை சுருங்குவது கண்கூடாகத் தெரியும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடல் பருமன்
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.
இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.
சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.
ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – அரை ஸ்பூன் (ஒன்றிரண்டாகத் தட்டிக்கொள்ளவேண்டும்)
இஞ்சி – ஒரு இன்ச் (தோல் சீவி தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)
பட்டை – 1
கிராம்பு – 2
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
மிளகுத்தூள் – 2 சிட்டிகை
எலுமிச்சை பழம் - அரை
செய்முறை
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்றிரண்டாக தட்டிய கருஞ்சீரகம், இஞ்சி, பட்டை, கிராம்பு என அனைத்தையும் சேர்த்து அரை டம்ளர் வரும் வரை கொதிக்க விடவேண்டும்.
அந்த அளவு கொதித்தவுடன், அதை வடிகட்டி அதில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகவேண்டும்.
இந்த பானத்தை பருகுவதுடன், வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உட்கொண்டு வந்தால், மூன்று மாதத்தில் உங்கள் தொப்பை காணாமல் போதும். உடலின் வளர்சிதை அதிகரித்து உடல் எடையும் குறையும்.
இது உங்கள் நல்ல பலனை தருவதுடன், உடலில் வேறு எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்