தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  New Year Wish Spouse: புத்தாண்டில் உங்கள் துணைக்கு இப்படி வாழ்த்து கூறி தூள் கிளப்புங்க

New Year Wish Spouse: புத்தாண்டில் உங்கள் துணைக்கு இப்படி வாழ்த்து கூறி தூள் கிளப்புங்க

Dec 14, 2023, 11:00 AM IST

google News
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இப்போது இருந்தே பலரும் திட்டமிட தொடங்கியுள்ளனர். இந்த நாளில் கணவன், மனைவி ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள சில டிப்ஸ்
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இப்போது இருந்தே பலரும் திட்டமிட தொடங்கியுள்ளனர். இந்த நாளில் கணவன், மனைவி ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள சில டிப்ஸ்

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இப்போது இருந்தே பலரும் திட்டமிட தொடங்கியுள்ளனர். இந்த நாளில் கணவன், மனைவி ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள சில டிப்ஸ்

உங்கள் துணை மீது உங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த தருணமாக அவர்களிடம் புத்தாண்டு வாழ்த்து கூறி, சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து இன்ப கடலில் ஆழ்த்துவதாகும். உங்கள உங்களுக்கு எவ்வளவு சிறப்பு என்பதை அவர்கள் உணர செய்ய எப்படியெல்லாம் வாழ்த்தலாம் என்பதை பார்க்கலாம்

அன்புக்குரியவரே (கணவன்/ மனைவி), நீ என் வாழ்வில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அன்பை கொடுத்தாய். உன்னை நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். உன் முகத்தில் புன்னகை ஒருபோதும் மறையாமல் பார்த்துக்கொள்வேன்.

வரும் ஆண்டு ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு சிறப்பு நாளாக இருக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பு கணவன்/மனைவி

மிகவும் சிம்பிளாக, இதயத்தை டச் செய்யும் விதமான வாழ்த்தாக, "இந்த புத்தாண்டை நாம் இருவரும் ஒன்றாக கழித்த மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடி மகிழ்வோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"

நீங்கள் எப்போதும் எனக்கு மிகப்பெரிய பலமாகவும், ஆதரவாகவும் இருக்கிறீர்கள். என் மீது உங்களது நிபந்தனையற்ற அன்பை பொழிந்ததற்கும் நன்றி. எனக்கு உலகையே புரிய வைத்த என் அபிமான கணவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சந்திரன் இல்லாத போது என்னை வழிநடத்துபவள், நண்பன் இல்லாத போது என்னை ஆதரவாக நிற்பவள். நான் நிலைகுலைந்து நிற்கும்போது என்னை கட்டியாக பிடித்து கொள்பவள், எப்போதும் என்னை நேசிப்பவள். உலகின் சிறந்த மனைவிக்கு அழகான புத்தாண்டு 2024 வாழ்த்துக்கள்

அப்புறமென்ன புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களது துணையிடம் பரிமாறி அவர்களின் அன்பை பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி