தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ridge Gourd Dal Curry : பீர்க்கங்காய் பருப்பு கறி; உச்சுக்கொட்டும் சுவையில், அள்ளி அள்ளி சாப்பிட ஆவலாக இருக்கும்!

Ridge Gourd Dal Curry : பீர்க்கங்காய் பருப்பு கறி; உச்சுக்கொட்டும் சுவையில், அள்ளி அள்ளி சாப்பிட ஆவலாக இருக்கும்!

Priyadarshini R HT Tamil

Jul 20, 2024, 09:24 AM IST

google News
Ridge Gourd Dal Curry : பீர்க்கங்காய் பருப்பு கறி, குக்கரில் 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். உச்சுக்கொட்டும் சுவையில், அள்ளி அள்ளி சாப்பிட ஆவலாக இருக்கும்.
Ridge Gourd Dal Curry : பீர்க்கங்காய் பருப்பு கறி, குக்கரில் 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். உச்சுக்கொட்டும் சுவையில், அள்ளி அள்ளி சாப்பிட ஆவலாக இருக்கும்.

Ridge Gourd Dal Curry : பீர்க்கங்காய் பருப்பு கறி, குக்கரில் 10 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். உச்சுக்கொட்டும் சுவையில், அள்ளி அள்ளி சாப்பிட ஆவலாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்)

பீர்க்கங்காய் – 2

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி தண்ணீர் – 50 மிலி

(நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீரில் கரைத்து வைத்துவிடவேண்டும்)

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

தக்காளி – 2

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

வரமிளகாய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

ஒரு குக்கரில் பருப்பு, முழு பச்சை மிளகாய், பீர்க்கங்காய், மஞ்சள் தூள், உப்பு, புளி தண்ணீர், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய், நல்லெண்ணெய், தக்காளி சேர்த்து மூடிவைத்து 5 முதல் 6 விசில்களை வரை விடவேண்டும்.

குக்கரின் ஸ்டீம் அடங்கியவுடன், திறந்தால் அனைத்தும் நன்றாக மசிந்து இருக்கும். அதை மீண்டும் ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சீரகம், உளுந்து, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வேகவைத்த பருப்பு கறியில் சேர்க்கவேண்டும்.

பெருங்காயத்தூளை தாளிப்பில் கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டுத்தான் சேர்க்கவேண்டும். அப்போதுதான் கருகிவிடாமல் இருக்கும். 

மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையில் பீர்க்கங்காய் பருப்பு கறி தயார். இதை, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

பீர்க்கங்காயின் நன்மைகள்

பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் ஃப்ரி ராடிக்கல்களை நீக்கி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி, சரும திசுக்களின் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய் என்பதால், இது உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை போக்குகிறது. 

இதில் உள்ள பொட்டாசியம், சிங்க், காப்பர், செலினியம் போன்ற மினரல்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இது உடலில் உள்ள அசிடிட்டியை சமப்படுத்துகிறது.

பீர்க்கங்காயின் இலைகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. பீர்க்க இலைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவினால் பலன்தரும்.

பீர்க்கங்காய் கலோரிகள் குறைந்த ஒன்றாகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. பீர்க்கங்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது.

பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வயோதிகத்திலும் கண் பார்வைத்திறனை நன்றாக வைத்திருக்கச் செய்கிறது. கண்ணில் வேறு குறைபாடுகள், மங்கலான பார்வை ஆகிய அனைத்தையும் குணப்படுத்துகிறது.

பீர்க்கங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் செல்லுலோஸ் அதிகம் உள்ளது. அது இயற்கையான நார்ச்சத்துக்கள் ஆகும். இதனால், பீர்க்கங்காயை சாப்பிடும்போது மலச்சிக்கல் நீங்குகிறது.

பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்துக்களால் உங்கள் உடல் அதை உறிஞ்சுவதற்கு தாமதம் ஆகிறது. இதனால், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. 

இதில் கலோரிகளும் குறைவு. மேலும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த தேர்வாகவும் உள்ளது.

பீர்க்கங்காயில் எண்ணற்ற இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதனால் இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது அனீமியாவைப் போக்குகிறது.

பீர்க்கங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கழிவு மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் அசுத்தங்களையும், செரிக்காத உணவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், ரிபோஃப்ளாவின், தியாமின் மற்றும் சிங்க் சத்துக்கள் வீக்கத்தை குறைத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பை வழங்குகிறது.

பீர்க்கங்காய் அசிடிட்டியை குணப்படுத்தி, அல்சர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளைப் போக்குகிறது.

இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உதவுகிறது. இந்த மினரல்கள் பீர்க்கங்காயில் அதிகம் உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி