தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து தவிக்கிறீர்களா? உறவில் நம்பிக்கை வளர்க்கும் வழிகள் இவைதான்!

Relationship : மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து தவிக்கிறீர்களா? உறவில் நம்பிக்கை வளர்க்கும் வழிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil

Jan 17, 2024, 05:00 PM IST

google News
Relationship : மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து தவிக்கிறீர்களா? உறவில் நம்பிக்கை வளர்க்கும் வழிகள் இவைதான்!
Relationship : மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து தவிக்கிறீர்களா? உறவில் நம்பிக்கை வளர்க்கும் வழிகள் இவைதான்!

Relationship : மனிதர்கள் மீது நம்பிக்கையை இழந்து தவிக்கிறீர்களா? உறவில் நம்பிக்கை வளர்க்கும் வழிகள் இவைதான்!

எந்த உறவில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கைதான் அடித்தளம். அது நட்பு, குடும்பம், காதல் என எதுவாக இருந்தாலும் அந்த உறவில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். ஆனால் சிலருக்கு யாரையும் நம்புவது கடினமான ஒன்றாக இருக்கும் அல்லது அவர்களுக்கு ஒருவரை நம்புவதற்கும், அவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நீண்ட காலம் தேவைப்படும். 

இது அவர்களுக்கு முன்னால் ஏற்பட்ட கெட்ட அனுபவங்களால் கிடைப்பது ஆகும். இதுபோல் உங்களுக்கு அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால், இதோ உங்களுக்கு அடுத்தவர்களை நம்புவதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் உறவை வலுப்படுத்தவும் உதவும்.

திறந்த மனதுடனும், வெளிப்படையான உரையாடல் வேண்டும்

ஒரு உறவில் திறந்த மனதுடனும், நேர்மையான உரையாடலை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். எனவே உங்கள் உணர்வுகள், சிந்தனைகள், மற்றவர்களிடம் உங்களின் எதிர்பார்ப்புகள் என அனைத்தும் வெளிப்படையாக இருக்கட்டும். உங்களின் தேவைகளை தெளிவாக விளங்குங்கள். அவர்களை முழுவதும் நன்றாக கவனிக்க வேண்டும். 

அதன்மூலம், அவர்களுடன் நீங்கள் எளிதாக தொடர்புகொள்ள வழி கிடைக்கும். அவர்களின் முடிவுகள் குறித்து முன் முடிவுகளை எடுக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும்படி கூறுங்கள். இது இருவரும் இணைந்திருக்கவும், ஒருவர் மீது ஒருவர் நன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.

எப்போது ஒரே மாதிரி இருங்கள்

நம்பிக்கைக்கு மிகவும் முக்கியமானது, எப்போதும் ஒரே நிலையில் இருப்பது. அடுத்தவர்கள் நமது நடவடிக்கைகளை பார்த்துதான் நம்மை நம்புகிறார்கள். உண்மையான நடவடிக்கை எனில், அது ஒரே மாதிரியாக இருக்கும். நாம் மாறிக்கொண்டே இருந்தால் அப்போது நடிக்கிறோம் என்பது வெளிபட்டுவிடும். 

எனவே நம்பிக்கையை வளர்த்தெடுக்க என்ன செய்யவேண்டுமோ அதை கட்டாயம் செய்வதற்கு எப்போதும் ஒரேமாதிரி இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் மற்றவருக்கு வாக்களித்தால், அதை கடைபிடிப்பதை உறுதிப்படுத்துங்கள். இது பாதுகாப்பு உணர்வை தரும். உங்களை நம்பகமானவராக்கும்.

பரிவு காட்டுபவராகவும், பாதிக்கப்படக்கூடியவராகவும் இருங்கள்

நம்பிக்கையை வளர்க்க பாதிக்கப்படக்கூடிய நபராக இருப்பது உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களின் சிந்தனைகள், அச்சங்கள், பாதுகாப்பின்மை ஆகிய அனைத்தையும் உங்கள் இணையரிடம பகிர்ந்துகொள்ளுங்கள். 

துவண்டுபோகும் அவரை தேற்றுங்கள். அவரை ஊக்கப்படுத்துங்கள். பாதிப்படுபவராக இருப்பது உங்கள் பார்ட்னருடன், ஆழ்ந்த தொடர்பை உருவாக்கும். இது நீங்கள் அவரை நம்புவதை காட்டும், இதனால் அவர்களின் மொத்த உணர்வுகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். 

அவர்களை புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவராக இருக்க நீங்கள் அவர் மீது பரிவு காட்டும் ஒரு நபராக இருக்க வேண்டும். இது உங்களுக்கு பலமான பிணைப்பையும், உங்கள் உறவில் நம்பிக்கை வளரவும் உதவுகிறது.

எல்லைகளை வகுப்பது மற்றும் மதிப்பது

ஒரு ஆரோக்கியமான உறவில் பரஸ்பரமாக மதிப்புது மிகவும் அவசியம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட எல்லை மற்றும் இடத்தை மதிப்பு ஒவ்வொருவரும் நடக்க வேண்டும். 

உங்களின் எல்லைகளை தெளிவாக குறிப்பிட்டு, அவர்களிடம் கூறிவிடவேண்டும். அதையே அவர்களும் செய்ய வேண்டும். தனிப்பட்ட இடத்தை வளர்ப்பது, உறவில் நம்பிக்கை வளர மிகவும் உதவும்.

சண்டைகளை தீர்த்து, புரிதலை மதிக்க வேண்டும்

ஒரு உறவில் சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த சண்டைகளை கையாளும் விதத்தில்தான் உறவில் நம்பிக்கை என்பது வளர்த்தெடுக்கப்படுகிறது. சண்டையை தீர்க்கும் திறனை வளர்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பின்வருபவைதான். நன்றாக கவனிப்பது, சமரசம், இருவரும் சேர்ந்து தீர்வு காண்பது ஆகியவைதான். 

பிரச்னை நடந்துகொண்டிருக்கும் உங்கள் பார்ட்னரை திட்டுவதோ அல்லது விமர்சிப்பதோ கூடாது. அவரது கோணத்தை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். சேர்ந்து வேலை செய்து, சவால்களை கடக்க வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி