Relationship : நீங்கள் மனதளவில் வலுவானவராக இருக்கிறீர்களா? உங்களிடம் இந்த குணம் உள்ளதா என்று பாருங்கள்!
Jun 15, 2024, 04:09 PM IST
Parenting Tips : நீங்கள் மனதளவில் வலுவானவராக இருக்கிறீர்களா? உங்களிடம் இந்த குணம் உள்ளதா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
மனதளவில் திடமாக உள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அவர்களிடம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்
மனதளவில் வலுவான மக்கள், சுய ஒழுக்கம், உணர்வு ரீதியாக முறையான எண்ணங்கள் மற்றும் விழுந்தெழும் திறன் ஆகிய அனைத்தையும் கற்றிருப்பார்கள். அவர்களிடம் சுய புரிதல் மற்றும் அனுதாபம் இருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உறவை கட்டமைப்பார்கள். மனதளவில் வலுவானவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிரச்னைகளில் இருந்து மீண்டுடெழுதல்
மனதளவில் வலுவானவர்கள் தங்களின் சவால்கள் மற்றும் பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கடும் சூழல்களை வாய்ப்புகளாக பார்ப்பார்கள். அதில் இருந்து கற்கவும், வளரவும் முனைவார்கள். இந்த மீண்டெழும் திறன், அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை கடுமையான நேரங்களில் கொண்டுவரும்.
உணர்வுகளை கையாள்வது
அவர்களின் உணர்வுகளை சிறப்பாக கையாள்வார்கள். அவர்கள் அதிகப்படியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். அவர்களின் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டமாட்டார்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் தேவையான முடிவுகளை எடுப்பார்கள். உணர்வு ரீதியான இந்த நிலைத்தன்மைதான், அவர்கள் சவாலான நேரங்களிலும் அமைதியாக வெற்றிபெற முடியும்.
ஒற்றுக்கொள்ளும் திறன்
மனதளவில் வலுவானவர்கள் தங்களை தாங்களாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் வெற்றி தோல்வி, இரண்டையும் ஒன்றாக பார்ப்பார்கள். அவர் தங்கள் திறன்களின் மீது உண்மையான பார்வைகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எல்லைகளை உணர்ந்து நடப்பார்கள். இந்த சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையை வளர்க்கும். வெளியில் இருந்துவரும் விமர்சனங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்களை குறைக்கும்.
இலக்குகள் சார்ந்த நடவடிக்கைகள்
மனதளவில் வலுவான மக்கள், தெளிவான மற்றும் சாதிக்க முடிந்த இலக்குகளை நிர்ணயித்து, அதை நோக்கி, தீர்க்கமாக உழைப்பார்கள். இவர்களின் கவனம் மற்றும் அர்ப்பணிப்பு இவர்கள் பல்வேறு தடைகளையும் கடந்து ஓட உதவும். இவர்கள் பெரிய டாஸ்குகளை சிறிதாகவும், செய்ய முடிந்ததாகவும் பிரித்துக்கொள்வார்கள். தொடர் வளர்ச்சியை உறதிப்படுத்துவார்கள்.
ஏற்கும் திறன்
நெகிழ்தன்மை, வலுவான மனநிலையில் முக்கியமான அம்சமாகும். புதிய சூழல்களில் அவர்கள் சமாளித்து இருந்துகொள்வார்கள். அவர்கள் மாற்றங்களை ஏற்பார்கள் மற்றம் அவர்களின் தேவைப்படும்போது திட்டங்களை மாற்றவும் முனைவார்கள். இந்த ஏற்கும் திறன் பல்வேறு சூழல்களிலும் அவர்கள் சீற்றத்துடனும், தீர்க்கத்துடனும் இருப்பதை உறுதி செய்யும்.
சுய ஒழுக்கம்
மனதளவில் வலுவாக உள்ளவர்களிடம் ஒழுக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு அதிகம் இருக்கும். அவர்கள் நீண்ட நாள் நன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறுகிய கால மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். இந்த பழக்கங்கள் அவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற உதவும். இது அவர்களின் கொள்கைகளை சாதிக்க உதவும்.
நேர்மறை எண்ணங்கள்
அவர்கள் நேர்மறை எண்ணங்களை வைத்திருப்பார்கள். பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், தீர்வுகளை நோக்கி நடப்பார்கள். அவர்களின் நேர்மையான எண்ணங்கள், அவர்கள் கடினமான சூழல்களில் இருந்து வெளியேறவும், ஊக்கத்துடன் இருக்கவும் இருக்கும். இந்த நேர்மறை எண்ணங்கள் வாய்ப்புகக்ளை ஈர்க்கும். மீண்டெழும் திறனை வளர்த்தெடுக்கும்.
அனுதாபம் மற்றும் இரக்கம்
மனதளவில் வலுவான மக்களின் பலமே மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வது மற்றும் அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்வதில்தான் உள்ளது. அவர்கள் அனுதாபத்தை பழகுவார்கள். இது அவர்களின் உறவை மேம்படுத்தும். அவர்களின் தொடர்புகொள்ளும் திறனை அதிகரிக்கும். இந்த இரக்க குணம், அவர்களிடமும் ஏற்பட்டு, சுயகவனம் மற்றும் அன்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
சுதந்திரம்
மனதளவில் வலுவானவர்கள் தற்சார்புடையவர்களாக இருப்பார்கள். யாரையும் சார்ந்து அவர்கள் முடிவுகளை எடுக்க மாட்டார்கள். அவர்கள் அறிவுரைகளை மதிப்பார்கள், அவர்கள் விமர்சனங்களை நம்புவார்கள். இந்த சுதந்திரம் அவர்களுக்கு ஆற்றலைத் தரும். அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், முன்னெடுப்புகளை எடுக்கவும் இது அவர்களுக்கு உதவும்.
வாழ்வின் கோணங்களில் சமநிலையில் இருப்பது
மனதளவில் வலுவானவர்கள், ஆரோக்கியமான பணி மற்றும் வாழ்க்கை சமநிலையைப் பேணுவார்கள். அவர்கள் ஓய்வு குறித்தும், உறவுகள் மற்றும் மீட்டுருவாக்கம் என அனைத்து குறித்தும் அறிந்து வைத்திருப்பார்கள். இந்த சமநிலை மனநிலை அவர்களின் நலனை உறுதிசெய்யும். அவர்கள் கோவத்தில் கொந்தளிப்பதை தடுக்கும். அவர்கள் நீடித்த வெற்றிக்கு வழிவகுக்கும்.
டாபிக்ஸ்