Raw Tomato Chutney : பச்சை தக்காளியில் சட்னி செய்யலாம் தெரியுமா? பஜ்ஜி மிளகாய் சேர்த்து செய்வது; செஞ்சு அசத்த இதோ ரெசிபி
Jul 26, 2024, 09:31 AM IST
Raw Tomato Chutney : பச்சை தக்காளியில் சட்னி செய்ய முடியும். பஜ்ஜி மிளகாய் சேர்த்து செய்யும்போது அது வித்யாசமான சுவையில் அசத்தும். செஞ்சு அசத்த இதோ ரெசிபி.
தக்காளி காயையும், பஜ்ஜி மிளகாயையும் வைத்து ஒரு சட்னி செய்யமுடியும். அதை சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும். அந்த சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.
தக்காளியை நாம் பெரும்பாலும் பழமாகத்தான் பயன்படுத்துவோம். ஆனால் தக்காளியை காயாகவும் சாப்பிடலாம். அதில் சட்னி, கிரேவி என செய்யமுடியும். இங்கு சட்னி செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
நெய் – 2 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – ஒரு இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பஜ்ஜி மிளகாய் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
தேங்காய் துருவல் – ஒரு கப்
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் நெய் சேர்த்து, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் பஜ்ஜி மிளகாய், தக்காளி காய், தேங்காய் துருவல், மல்லித்தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். நன்றாக வதங்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம், தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் தொக்கு செய்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.
தக்காளி நாம் அன்றாட உணவில் சேர்ப்பதுதான் என்றாலும், அதன் நன்மை கருதி, அதை தினமுமே உணவில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
டாபிக்ஸ்