தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Sprouts Adai : ராகி, முளைக்கட்டிய பாசிப்பயறு அடை! என்ன ஒரு ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! வாரம் ஒருமுறை கட்டாயம்!

Ragi Sprouts Adai : ராகி, முளைக்கட்டிய பாசிப்பயறு அடை! என்ன ஒரு ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்! வாரம் ஒருமுறை கட்டாயம்!

Priyadarshini R HT Tamil

Apr 06, 2024, 10:21 AM IST

google News
Ragi Sprouts Adai : சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Ragi Sprouts Adai : சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Ragi Sprouts Adai : சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய பயறு – ஒரு கப்

ராகி மாவு – 2 கப்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

மிளகாய்ப்பொடி – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – பூண்டு பொடி – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – அடையை வார்த்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

முளைக்கட்டிய பயறு எடுத்து அதை மிக்ஸிஜாரில் பல்ஸ் செய்து. ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, அதனுடன் ராகி மாவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை மிளகாய்ப்பொடி, இஞ்சி – பூண்டு பொடி, உப்பு, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள் என அனைத்தும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை தோசைக்கல்லில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஓரங்களில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், கிரேவி என அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் இதுவே மசாலாக்கள் கலந்து செய்யப்படுவதால், இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. சுவையும் நிறைந்தது.

இதை வாரம் ஒருமுறை கட்டாயம் செய்து சாப்பிட ஆரோக்கியம் பெருகும். காலை எழுந்தவுடன் இந்த ப்ரேக் பாஸ்ட் சாப்பிடுவது உங்கள் நாளை சுறுசுறுப்பாக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு வித்யாசமான சுவையுடன் இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல மொறு மொறுப்பாக செய்து ஸ்னாக்ஸ் போலவும் கொடுக்கலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி