தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Fry : டேஸ்டியான, குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் – வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

Potato Fry : டேஸ்டியான, குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் – வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil

Nov 11, 2023, 05:30 PM IST

google News
Potato Fry : டேஸ்டியான, குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் – வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!
Potato Fry : டேஸ்டியான, குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் – வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

Potato Fry : டேஸ்டியான, குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு மஞ்சூரியன் – வீட்டிலே செஞ்சு அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3

மைதா – கால் கப்

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

எள்ளு எண்ணெய் - 2 ஸ்பூன்

பூண்டு - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் – அரை (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – தேவையான அளவு

மிளகாய் தூள் – தேவையான அளவு

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

வினிகர் – அரை ஸ்பூன்

ரெட் சில்லி சாஸ் – ஒன்ற ஸ்பூன்

டொமேட்டோ கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயத்தாள்

செய்முறை -

உருளைக்கிழங்கை கழுவி, தோலை நீக்கி, சதுரமாக சம அளவிலான துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

நிறம் மாறாமல் இருக்க ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வைக்கவேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் வேகவைத்த உருளைக்கிழங்கை மாவு கலவையில் தோய்த்து ஒவ்வொன்றாக

போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான கடாயில், எள் எண்ணெய், பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவேண்டும்.

தீயை குறைத்து வைத்து அதில் சோயா சாஸ், வினிகர், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலந்துவைக்க வேண்டும். பின்னர் வறுத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விடவேண்டும். கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து விடவேண்டும்.

சுவையான, காரமான மற்றும் சுலபமாகச் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு மஞ்சூரியன், சிறிது டொமேட்டோ கெட்சப்புடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி