தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper Masala Kulambu : மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் மிளகு குழம்பு! நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும்!

Pepper Masala Kulambu : மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் மிளகு குழம்பு! நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும்!

Priyadarshini R HT Tamil

Jul 06, 2024, 01:08 PM IST

google News
Pepper Masala Kulambu : மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் மிளகு குழம்பு செய்வது எப்படி தெரியுமா? நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும் அவற்றை காட்டாயம் ஒருமுறையாவது ருசிக்கவேண்டும்.
Pepper Masala Kulambu : மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் மிளகு குழம்பு செய்வது எப்படி தெரியுமா? நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும் அவற்றை காட்டாயம் ஒருமுறையாவது ருசிக்கவேண்டும்.

Pepper Masala Kulambu : மணமணக்கும் மசாலா அரைத்து செய்யும் மிளகு குழம்பு செய்வது எப்படி தெரியுமா? நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும் அவற்றை காட்டாயம் ஒருமுறையாவது ருசிக்கவேண்டும்.

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – 3 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 2 பல்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வரமிளகாய் – 5

மிளகு குழம்பு செய்ய

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காய தூள் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

பூண்டு – கால் கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

புளி தண்ணீர் – ஒரு கப்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

கல் உப்பு – 2 ஸ்பூன்

வெல்லம் – 2 ஸ்பூன்

செய்முறை -

மசாலா விழுது அரைக்க

கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், வரமல்லி, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து நன்றாக சிவக்கும் வரை வறுக்கவேண்டும். பின்னர் பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவேண்டும். பின்னர் நன்றாக ஆறவிட்டு முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.

மிளகு குழம்பு செய்ய

தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவேண்டும். கடுகு பொரிந்தவுடன், பெருங்காய தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் இறக்கவேண்டும். அட்டகாசமான மிளகு குழம்பு தயார்.

இதை சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

மேலும் எப்போதும் மிளகு குழம்பு அல்லது புளிக்குழம்பு செய்வதற்கெல்லாம், செக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவது நல்லது. அது உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு சுவையையும் தரும்.

மிளகு

கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மிளகு உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தருகிறது. வரலாற்று சிறப்புமிக்க மசாலாக்களுள் ஒன்று. இது உணவுகளுக்கு பிரிசர்வேட்டிவாகவும், சுவையை கொடுப்பதாகவும் உள்ளது. இது சூடான உணவுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது.

தென்னிந்தியாவில் கேரளா, கோவா மற்றும் கர்நாடகாவில் அதிகம் விளைகிறது. ரோம், கிரீஸிலும் உள்ளது. மத்திய காலங்களில் இது பிரபலமானது. உலகின் 39 சதவீத மிளகு உற்பத்தி வியட்நாமில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பிரேசில் 10 சதவீத உற்பத்தியையும், இந்தோனேஷியா 15 சதவீத உற்பத்தியையும் கொண்டுள்ளது.

சுவைக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள பயோஆக்டிவ் உட்பொருட்கள் மற்றும் பைப்பெரின் ஆகியவை மிகவும் முக்கியமானது. பைப்பரின் இயற்கை ஆல்கலைட் ஆகிறது. இதுதான் கார சுவையை மிளகுக்கு தருகிறது. இதுதான் முக்கிய உட்பொருளும் ஆகிறது. இதில்தான் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன.

பைப்பெரின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், நரம்புக்கோளாறுகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. மிளகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு ரத்தத்தில் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம் மறறும் குடல் நலனுக்கு உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

மிளகில் பைபெரின் மற்றும் சாவின்சின் போன்ற ஒலியோரெசின்ஸ் மற்றும் ஆல்கலைட்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள் உள்ளன. இது உங்கள் உடலில் உள்ள செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மிளகில், வைட்டமின்கள் கே, ஈ, ஏ, தியாமின், ரிபோஃப்ளாவின், பேண்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, காப்பர், மாங்கனீஸ், இரும்புச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சிங்க், குரோமியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

மிளகில் உள்ள மாங்கனீஸ், எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. காயங்களை ஆற்றுகிறது. உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. ஒரு ஸ்பூன் மிளகில், உங்களுக்கு தினசரி தேவையில் 13 சதவீத மாங்கனீஸ் மற்றும் 3 சதவீதம் வைட்டமின் கேவும் உள்ளது.

ஒரு ஸ்பூன் மிளகில் 6 கலோரிகள், 0 கிராம் புரதம், 0 கிராம் கொழுப்பு, ஒரு கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் நார்ச்சத்துக்கள், சர்க்கரை 0 கிராம், கொலஸ்ட்ரால் 0 மில்லிகிராம், சோடியம் 0 மில்லிகிராம் உள்ளது.

கவனிக்க வேண்டியது என்ன?

மிளகில் உள்ள பைப்பரின் என்ற உட்பொருள், சில மருந்துகளுடன் வினைபுரியும் தன்மை கொண்டது. மருத்துகளுடன் சில வேதிவினைகளை ஏற்படுததும். எனவே நீங்கள் மருந்து உட்கொள்ளும்போது, அதில் மட்டும் கவனம் தேவை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி