தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pasipayaru Liver Fry : பாசிப்பயிறில் ஈரல் வறுவல் செய்ய முடியுமா? குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்தது; இதோ ரெசிபி!

Pasipayaru Liver Fry : பாசிப்பயிறில் ஈரல் வறுவல் செய்ய முடியுமா? குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்தது; இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil

Sep 28, 2024, 02:42 PM IST

google News
Pasipayaru Liver Fry : பாசிப்பயிறில் ஈரல் வறுவல் செய்ய முடியுமா? குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்தது. இதோ இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
Pasipayaru Liver Fry : பாசிப்பயிறில் ஈரல் வறுவல் செய்ய முடியுமா? குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்தது. இதோ இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

Pasipayaru Liver Fry : பாசிப்பயிறில் ஈரல் வறுவல் செய்ய முடியுமா? குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்தது. இதோ இங்கு ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

பாசிப்பயறில் உடலுக்குத் தேவையான எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதை வைத்து பல ரெசிபிக்களை செய்யமுடியும் அல்லது ஊறவைத்து முளைக்கட்டி அப்படியே சாப்பிடவும் ஏற்றது. உங்கள் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஆற்றலை இந்த பாசிப்பயறு கொடுத்துவிடும். பாசிப்பயறில் இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகை உணவுகளும் செய்யமுடியும். இதில் தயாரிக்கப்படும் லட்டுகள் குழந்தைகளின் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றன. உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டால் அவர்களுக்கு பாசிப்பயிறில் லட்டு செய்து தினமும் கொடுத்தால் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். பாசிப்பருப்பில் ஈரல் வறுவல் என்ற வித்யாசமான ஒன்றை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி செய்திருப்பார். அது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பாசிப்பயறு – ஒரு கப்

(ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும்)

அரைக்க தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் – 1

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வறுவல் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

முழு கரம் மசாலா

பட்டை – 1

கிராம்பு – 4

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2 (முழுதாக சேர்க்கவேண்டும்)

வெங்காயம் – 2 (மிகப்பெடியாக நறுக்கியது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தக்காளி – 2 (மிகப்பொடியாக நறுக்கியது)

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஓரிரவு ஊறவைத்த பச்சைபயறில் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். வெந்தவுடன் ஆறவைத்து அதை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதில் முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, மல்லித்தூள், கரம் மசாலாத் தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து நறுக்கி வைத்துள்ள பாசிப்பயிறு துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் சூப்பர் சுவையில் பாசிப்பயறு ஈரல் வறுவல் தயார்.

இதில் தேங்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து அரைத்து கிரேவி போலும் செய்துகொள்ளலாம். இதை அனைத்து வகை சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள சிறப்பான இருக்கும். கிரேவியாக செய்தால் சாதம், டிஃபன் என அனைத்தும் சைட் டிஷ் கிடைத்துவிடும். இதை பாசிபருப்புக்கு பதில் ராஜ்மாவிலும் செய்யலாம்.

இது சூப்பர் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் ருசிப்பீர்கள்.

இதுபோன்ற எண்ணற்ற சுவை மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி