தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paruthi Paal: மதுரை பேமஸ் பருத்திபால்.. சளி இருமலை முதல் உடல் வலியை போக்க உதவும்!

Paruthi Paal: மதுரை பேமஸ் பருத்திபால்.. சளி இருமலை முதல் உடல் வலியை போக்க உதவும்!

Feb 15, 2024, 01:52 PM IST

google News
பருத்திப்பாலை எந்த ஊரில் விற்றாலும் மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால் என்று போர்டு வைத்திருப்பதை பார்க்க முடியும். வாங்க மதுரையின் பாரம்பரிய பருத்திப்பால் எப்படி செய்வது என பார்க்கலாம்.
பருத்திப்பாலை எந்த ஊரில் விற்றாலும் மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால் என்று போர்டு வைத்திருப்பதை பார்க்க முடியும். வாங்க மதுரையின் பாரம்பரிய பருத்திப்பால் எப்படி செய்வது என பார்க்கலாம்.

பருத்திப்பாலை எந்த ஊரில் விற்றாலும் மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால் என்று போர்டு வைத்திருப்பதை பார்க்க முடியும். வாங்க மதுரையின் பாரம்பரிய பருத்திப்பால் எப்படி செய்வது என பார்க்கலாம்.

மதுரை மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயிலை போலவே பல உணவுகளுக்கும் பேமஸ். மதுரை ஜிகர்தண்டா, பருத்திப்பால் போன்ற உணவுகளுக்கும் பெயர் பெற்றது. இன்று பருத்திப்பாலை எந்த ஊரில் விற்றாலும் மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால் என்று போர்டு வைத்திருப்பதை பார்க்க முடியும். வாங்க மதுரையின் பாரம்பரிய பருத்திப்பால் எப்படி செய்வது என பார்க்கலாம்.

பருத்தி பால் செய்ய தேவையான பொருட்கள்

1. பருத்தி கொட்டை- 2 கப்

2. வெல்லம் - 1 1/2 கப்

3. பச்சரிசி-1/4 கப்

4. ஏலக்காய் - 5

5. சுக்கு-ஒரு சிறிய துண்டு

6. மிளகு 

7. திப்பிலி

8. தேங்காய் - ஒரு கப்

பருத்தி பால் செய்முறை

பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்தி பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் ஊற வைக்க வேண்டும்.

இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்தி கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்து கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்து கொள்ள வேண்டும்.

அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்தி பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு பிஞ்ச் உப்பை கலந்து கொள்ள வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் பால் கட்டி பட்டு விடும்.

பருத்தி பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து கிளற வேண்டும். இதையடுத்து நன்றாக கொதித்த பின் ஏலக்காய் பொடியை சிறிதளவு சேர்த்து கொள்ள வண்டும். சுக்குமிளகு திப்பிலியை பொடி செய்து  அதை பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு தேங்காயை சில்லாகவே அல்லது துருவியோ சேர்த்துக்கொள்ளலாம். தேவை என்றால் தேங்காயை லேசாக நெய்யில் வதங்கி சேர்த்துக் கொள்ளலாம். இது சுவை மணம் இரண்டடையும் அதிகரிக்க உதவும். பின்னர் சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்தி பாலை பரிமாறலாம்.

குறிப்பு: பருத்தி பாலில் வெள்ளத்திற்கு பதிலாக கருப்பட்டி பாகு கலந்தும் செய்யலாம் ருசி அருமையாக இருக்கும்.

பருத்தி பாலின் நன்மைகள்.

பருத்தில் பால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. வயிறு சார்த்த அனைத்து பிரச்சனைகைளையும் போக்கும். அல்சர் பிரச்சனையை சரி செய்ய உதவும். மலச்சிக்கலை சரி செய்யும் தன்மை கொண்டது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனையின் போது ஏற்படும் வலிகளுக்கு இந்த பருத்தி பால் நிவாரணம் தரும். இன்று கடைகளில் விற்கும் ஹெல்த் டிரிக்ஸ் வாங்கி குடிப்பதற்கு பதிலாக சத்தான இந்த பருத்தி பால் போன்ற உணவுகளை குடிப்பது மிகவும் நன்மை தரும்.

நாம் வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண் பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி