குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : பெற்றோரிடம் குழந்தைகள் விரும்புவது அல்லது எதிர்பார்ப்பது என்ன?
Updated Jun 17, 2025 04:06 PM IST

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : பெற்றோரிடம் குழந்தைகள் விரும்புவது அல்லது எதிர்பார்ப்பது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல வளரும் சூழலை உறுவாக்கி தரவேண்டியது உங்களின் கடமையல்ல பொறுப்பு.
ஒரு நேர்மறையான உறவுக்கு குழந்தைகள் பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவவேண்டும். நல்ல ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கத்தரவேண்டும். எனவே உங்கள் குழந்தைகள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அனைத்து வழிகளிலும் அன்பு மற்றும் பாசம்
அனைத்துக்கும் மேல் குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும்தான். அவர்களை அணைத்துக்கொள்வது, முத்தமிடுவது மற்றும் நன்றாக பேசுவது, ஒரு பாதுகாப்பான சுற்றத்தை உருவாக்குவது, அவர்களுக்கு உணர்வு ரீதியான சூழலை உருவாக்குவது உங்களின் பொறுப்பு. இதைத்தான் குழந்தைகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
தரமான நேரம்
குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து செலவிடும் நேரம் மிகவும் முக்கியமானது. தங்கள் பெற்றோர் தங்களுடன் நேரத்தை செலவிடவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஒன்றாக அவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, வாசிப்பது, வெளியே செல்வது என அனைத்தும் நீங்கள் செய்ய வேண்டும். இது குழந்தைக்கும், பெற்றோருக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் நிறைய நினைவுகளையும் கொடுக்கிறது.
அவர் மீது கவனம் செலுத்த வேண்டும்
குழந்தைகள் அவர்களின் பெற்றோர் அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நன்றாக அவர்கள் கவனிக்கும்போது, அவர்களின் சிந்தனைகள், அக்கறைகள், கதைகள் என அனைத்தையும் நீங்கள் கேட்கும்போது, நீங்கள் அவர்களை புரிந்துகொள்கிறீர்கள் மற்றும் அவர்களை மதிக்கிறீர்கள் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
ஊக்கம் மற்றும் நேர்மறை சிந்தனைகள்
குழந்தைகளை ஊக்கப்படுத்தும்போதும், அவர்களை நேர்மறையாக பாராட்டும்போதும் அவர்கள் உற்சாகமடைகிறார்கள். அவர்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை நீங்கள் பாராட்டும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. அவர்களுக்கு அவர்கள் குறித்த ஒரு நேர்மறையான தோற்றம் உருவாகிறது.
நம்பிக்கை மற்றும் புரிதல்
குழந்தைகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் கோணங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்கிறார்கள். அவர்களுடன் உங்களுக்கு ஒத்துப்போகவில்லையென்றாலும், இது இருவருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையை ஏற்படுத்துகிறது.
சுதந்திரம் மற்றும் சுய முடிவுகள்
குழந்தைகள் வளர வளர அவர்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். எனவே அவர்களின் வயதுக்கு ஏற்ப முடிவுகளையும், தேர்வுகளை செய்வதற்கு நீங்கள் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் இது அவர்கள் தங்களை சுயமாக வளர்த்துக்கொள்ள உதவும்.
குழந்தைகளின் ஆர்வங்களுக்கு ஆதரவு கொடுங்கள்
குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் என அவர்கள் ஆர்வம் காட்டும் விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். அவர்கள் விரும்பியதை செய்வதற்கு ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்த வேண்டும்.
திறந்த உரையாடல்
குழந்தைகள் தங்கள் மனதில் பட்டதை சொல்லக்கூடிய சூழலை உருவாக்குங்கள். அவர்கள் அச்சமின்றி எந்த விஷயத்தை உங்களிடம் பகிர முடியும் என்பதுதான் அவர்களுக்கு பாதுகாப்பான சூழல். அவர்கள் நினைப்பதை கூறுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் உணர்வுகளை அப்படியே உங்களிடம் கூறவேண்டும். அதுகுறித்து நீங்கள் எந்த அறவுரையும் கூறக்கூடாது.
பொறுமை
குழந்தைகள் வளர்கிறார்கள் மற்றும் கற்கிறார்கள், அதனுடனே அவர்கள் தவறுகளும் செய்கிறார்கள். எனவே நல்ல ஒரு கற்கும் சூழலை உருவாக்க பெற்றோருக்கு பொறுமை அவசியம். அது குழந்தைகளுக்கு சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.
வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். தங்களின் உடைகளை தாங்களே சரியாக அணிந்துகொள்வது முதல் தங்களின் உணர்வுகளையும் தாங்களே கையாள வேண்டும் என்பது வரையும் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த திறன்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தில் வெற்றிகளும் அதிகம் கிடைக்கிறது.
தனித்தன்மையை கொண்டாடுங்கள்
ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமைகள் நிறைந்தவர். அவர்களுக்கு தனிப்பட்ட பலங்கள், பலவீனங்கள் உள்ளது. தனிப்பட்ட ஆர்வங்களும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் தனித்தன்மையை நீங்கள் கொண்டாடும்போது, அவர்களுக்கு அது தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.
டாபிக்ஸ்