தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paal Kozhukattai :செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி?

Paal Kozhukattai :செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil

Nov 18, 2023, 01:00 PM IST

google News
Paal Kozhukattai : செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி?
Paal Kozhukattai : செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி?

Paal Kozhukattai : செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – கப் ஒரு

உப்பு - தேவையான அளவு

நெய் – 1 ஸ்பூன்

தேங்காய்ப்பால் – முதல் பால் – 2 கப், இரண்டாவது பால் – 2 கப்

(தேங்காய் பாலுக்கும் பதில் பால் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அது உங்கள் விருப்பம், பால் சேர்த்தால் பால் 4 கப் எடுத்துக்கொள்ள வேண்டும. பால், தேங்காய்ப்பால் இரண்டுமே சேர்க்காமல் வெறும் பச்சரிசி மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். பால் கொழுக்கட்டை திக்காக வரும்)

தேங்காய் – ஒரு கப் (துருவியது)

ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை

வெல்லம் – ஒரு கப்

(வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாகை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெல்லத்தில் உள்ள தூசி உணவில் சேராது)

செய்முறை

அரிசி மாவில், சிறிதளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்துவிட்டு, சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். மாவை இடியாப்ப மாவு பதத்துக்கு மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும். அதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் மற்றும் இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். கொதி வந்தவுடன், அதில் உருட்டி வைத்துள்ள மாவை சேர்க்க வேண்டும்.

(கொதிக்கும்போதுதான் உருட்டி வைத்துள்ள மாவை சேர்க்க வேண்டும். அப்போதுதான் உருண்டைகள் உடையாமல் வேகும். தண்ணீர் நன்றாக கொதிப்பதற்கு முன் சேர்த்தால் உருண்டைகள் உடைந்து, கரைந்து கஞ்சிபோல் மாறிவிடும். எனவே பால் கொழுக்கட்டை செய்யும்போது அதிக கவனமாக இருக்க வேண்டும்)

உருண்டைகள் நன்றாக வெந்தவுடன் வடித்து வைத்துள்ள வெல்லப்பாகு மற்றும் தேங்காயின் முதல் பால் சேர்க்க வேண்டும். கொஞ்சம் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் பால் கொழுக்கட்டை கொஞ்சம் கெட்டியாகும். பின்னர் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் தூவி இறக்கிவிடவேண்டும்.

இது மழைக்காலத்தில் நல்ல மாலை நேர சிற்றுண்டி, சுடச்சுட பரிமாறினால் சுவை அள்ளும். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி ருசிக்க தூண்டும் சுவையில் தான் இந்த பால்கொழுக்கட்டை இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி