தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oat: ஹெல்தியான ஓட்ஸ் லட்டு.. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு லட்டு போதும்.. ஊட்டச்சத்து கொட்டி கிடக்கு

Oat: ஹெல்தியான ஓட்ஸ் லட்டு.. சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு லட்டு போதும்.. ஊட்டச்சத்து கொட்டி கிடக்கு

Sep 08, 2024, 06:00 AM IST

google News
Oat : ஓட்ஸில் கஞ்சி செய்து குடுத்தால் குழந்தைகள் ஓடுகின்றனரா.. இனி கவலை வேண்டாம் இப்படி ருசியான லட்டு செய்து கொடுங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். டேஸ்ட்டான ஓட்ஸ் லட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க
Oat : ஓட்ஸில் கஞ்சி செய்து குடுத்தால் குழந்தைகள் ஓடுகின்றனரா.. இனி கவலை வேண்டாம் இப்படி ருசியான லட்டு செய்து கொடுங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். டேஸ்ட்டான ஓட்ஸ் லட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

Oat : ஓட்ஸில் கஞ்சி செய்து குடுத்தால் குழந்தைகள் ஓடுகின்றனரா.. இனி கவலை வேண்டாம் இப்படி ருசியான லட்டு செய்து கொடுங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். டேஸ்ட்டான ஓட்ஸ் லட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

Oat: ஓட்ஸ் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது மிகவு நல்லது ஆகும். இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓட்ஸில் நார்ச்சத்து மட்டுமின்றி உடலுக்குத் தேவையான பல சத்துக்களும் உள்ளன. பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி1 உடன் இணை கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. ஆற்றல் உற்பத்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாடு போன்ற உடல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் பலருக்கு பிடிப்பதில்லை. ஓட்ஸ் என்றாலே வியாதி வந்தவர்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஓட்ஸில் கஞ்சி செய்து குடுத்தால் குழந்தைகள் ஓடுகின்றனரா.. இனி கவலை வேண்டாம் இப்படி ருசியான லட்டு செய்து கொடுங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். டேஸ்ட்டான ஓட்ஸ் லட்டு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க

ஓட்ஸ் லட்டு தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்

எள் ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு -1/2 கப்

தேங்காய் - 1/2 கப்

நாட்டு சர்க்கரை - 1 கப்

உலர்திராட்சை - 50 கிராம்

முந்திரிபருப்பு - 50 கிராம்

நெய் - தேவையான அளவு

பேரிச்சம்பழம் - 10

ஓட்ஸ் லட்டு செய்முறை

ஒரு கப் ஓட்ஸ் நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். ஓட்ஸை நன்றாக வறுத்து எடுக்கும் போது அதன் பச்சை வாடை நீங்கும். பின்னர் அதை தனியாக ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

அதே கப்பில் அரைக்கப் நிலக்கடலையை எடுத்து வறுக்க வேண்டும். நன்றாக வறுத்த நிலக்கடலையின் தோலை நீக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இரண்டு ஸ்பூன் வெள்ளை எள்ளை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

தேங்காயை லேசாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஓட்ஸ் கடலை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். கடைசியாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்து இரண்டு பல்ஸ் வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து அரைத்த பொருளில் சேர்க்க வேண்டும். அதில் 10 பேரிச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு நெய் மிதமான சூடாக இருக்கும் போதே லட்டு உருண்டை பிடித்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் ருசியான சத்தான ஓட்ஸ் லட்டு ரெடி. சாப்பிட அடம்பிடுக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு லட்டு கொடுத்தாலே போதும். ஓரளவு ஊட்டச்சத்து கிடைத்து விடும்.

குறிப்பு : நாட்டு சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் கருப்பட்டி சேர்த்து கொள்ளலாம். இனிப்பு அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ சேர்த்து கொள்ளலாம். முந்திரி மட்டும், அல்லாமல் பாதாம், பிஸ்தா பல்வேறு போன்ற நட்ஸ் வகைகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம். நட்ஸ்களின் அளவு அதிகரிக்கும் போது சுவையிலும் சற்று வித்தியாசம் இருக்கும். நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தேங்காயை தவிர்த்து விடலாம்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி