New Year Wishes : குடும்பத்தினரை புத்தாண்டில் வாழ்த்துவது எப்படி? – இதோ வழிகள்!
Dec 14, 2023, 01:00 PM IST
Happy New Year Dear Family : நம் வாழ்வின் ஆதாரமே குடும்பம்தான். அவர்கள்தான நம்மை உருவாக்கவும் செய்கிறார்கள், உடையவும் வைக்கிறார்கள். நமது பலம், பலவீனம் இரண்டுமே அவர்கள்தான். எனவே நாம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
நாம் அனைவரும் புத்தாண்டு வரும்போது ஏதேனும் ஒரு நல்லப்பழக்கத்தை அந்த ஆண்டு முதல் எடுக்க வேண்டும் தீர்மானம் எடுத்து அதை பின்பற்றுவோம். பெரும்பாலும் அது நமது நலன் சார்ந்த ஒன்றாக இருக்கும். தற்போது நாம் 2023ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். நாம் 2024 என்ற புத்தம் புதிய ஆண்டை வரவேற்க காத்திருக்கிறோம். இந்த நாளில் நாம் அனைவரையும் வாழ்த்துகிறோம். உங்கள் குடும்பத்தினரை எப்படி இந்த புத்தாண்டில் வாழ்த்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த புத்தாண்டு வாழ்த்துக்களை நீங்கள் எந்த ஒரு உறவினருக்கும் அனுப்பலாம் அல்லது நீங்கள் குடும்பமாக நினைக்கும் நண்பர்களுக்கும் அனுப்பலாம். இந்த வாழ்த்துக்களை படிக்கும் அவர்கள் நிச்சயம் உற்சாகம் அடைவார்கள். இந்த வாழ்த்துக்களை புத்தாண்டின் முதல் நாளில் இருந்து நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
நம் வாழ்வின் ஆதாரமே குடும்பம்தான். அவர்கள்தான நம்மை உருவாக்கவும் செய்கிறார்கள், உடையவும் வைக்கிறார்கள். நமது பலம், பலவீனம் இரண்டுமே அவர்கள்தான். எனவே நாம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவர்கள் குறித்த உங்களின் உணர்வுகளை அவர்களுக்கு நீங்கள் புத்தாண்டில் தெரிவிக்க வேண்டும். அது உங்கள் உறவை பலப்படுத்தும்.
ஒரு உற்சாகமான ஆண்டுக்காக உங்கள் குடும்பத்தினரை வாழ்த்துங்கள். அவர்களுக்கு போனிலோ அல்லது வாழ்த்து அட்டைகளிலோ இந்த வாழ்த்துக்களை அனுப்பலாம். நீங்களே உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை கோர்த்து வாழ்த்து வாசகங்கள், வாழ்த்து அட்டைகளை உருவாக்கலாம். இந்த வாழ்த்துக்களுடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு பரிசுகளும் கொடுக்கலாம்.
உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க ஆண்டு உங்களுக்கு கிடைக்கட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் அழகான குடும்பத்தின் அங்கமாக இருப்பதில் எனக்கு இரண்டு விஷயங்கள்தான் முக்கியம் அது மகிழ்ச்சி மற்றும் உற்சாகம். நம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு இரவு என்பது எனது மொத்த குடும்பமும் இணையும் நிகழ்வு ஆகும். என் வாழ்வில் நீங்கள் அனைவரும் இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நன்றி மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டை உங்களுடன் துவங்க விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு மிகப்பெரிய குடும்பம் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நல்லாசிர்வாதங்களுடன் இந்தாண்டு நிறைவடையட்டும்
புத்தாண்டு பிரகாசமாக உற்சாகத்துடன் பிறக்க வழிவகுக்கட்டும்
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வாழ்வின் எல்லா புயலிலும், மழையிலும் நம் குடும்பத்தை கடவுள் ஒற்றுமையுடன் வைத்திருக்கட்டும். உற்சாகமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மறக்க முடியாத பல்வேறு நல் நினைவுகளை கொடுத்த, இந்த மறக்க முடியாத குடும்பத்தில், இதுபோன்ற பல்வேறு நினைவுகள் தொடரட்டும். இனிய புத்தாண்டு!
இந்த உலகத்திலேயே அழகான குடும்பத்திற்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களைப்பெற்ற வாழ்க்கைக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தாண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமையட்டும்.
நீங்கள் விரும்பிய அனைத்தையும் இந்த புத்தாண்டு கொண்டுவரட்டும். நமது குடும்பம் நமக்கு கொடுக்கும் அன்பும், பாசமும் மடும் எப்போதும் மாறாமல் இருக்கட்டும் என்று நான் விரும்புகிறேன். Happy 2024!
என் வாழ்வை நீங்கள் நிறைய முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளீர்கள். நாம் புதிய ஆண்டில் நுழைகிறோம். நீங்கள் எனக்கு கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. இனிய புத்தாண்டு!
என் இனிய குடும்ப உறவுகளே, நான் புத்தாண்டு வாழ்த்துக்களையும், எனது அன்பையும் அனுப்புகிறேன். புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பானதாக அமையட்டும். இந்தாண்டில் பொக்கிஷமான நினைவுகள் சேரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நாம் அனைவரும் குற்றம் புரிகிறோம், கொடுங் குற்றங்கள் கூட செய்கிறோம். ஆனால் சிலருக்கு மட்டும்தான் இதுபோன்ற குடும்பம் அமைகிறது. மன்னித்து அன்பை மட்டும் வழங்கும் குடும்பம். உங்கள் அனைவரையும் என் குடும்பத்தில் வைத்திருப்பது குறித்து மகிழ்கிறேன். இனிய புத்தாண்டு!
மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை என் குடும்பத்தினருக்கு நான் அனுப்புகிறேன். இந்த புத்தாண்டு எல்லாவற்றையும் விட சிறப்பானதாக அமையட்டும். மறக்க முடியாத நினைவுகளையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
எனது குடும்பத்திற்கு, நீங்கள் எப்போதும் என்னை வழி நடத்தியிருக்கிறீர்கள். கடைபிடிக்கத்தக்க உதாரணமாகவும் வாழ்கிறீர்கள். இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் பிரகாசமாக ஒளியை ஏற்படுத்தட்டும். இனிய புத்தாண்டு!
டாபிக்ஸ்