தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  New Year Wishes For Kids: கிட்ஸ்களுக்கு நியூ இயர் வாழ்த்து சொல்வது எப்படி? இதோ டிப்ஸ்!

New Year wishes for kids: கிட்ஸ்களுக்கு நியூ இயர் வாழ்த்து சொல்வது எப்படி? இதோ டிப்ஸ்!

Kathiravan V HT Tamil

Dec 14, 2023, 10:00 AM IST

google News
"New Year wishes for kids: உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை எப்படி தெரிவிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!"
"New Year wishes for kids: உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை எப்படி தெரிவிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!"

"New Year wishes for kids: உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை எப்படி தெரிவிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்!"

புத்தாண்டின் வருகை ஏராளமான மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், கொண்டு வருகிறது. இந்த புத்தாண்டு மட்டுமல்ல; எந்த புத்தாண்டு வந்தாலும் பாக்கியசாலிகள் குழந்தைகள்தான், ஏனெனில் நம்மை போல் அல்லாமல் குழந்தைகள் உலகம் மாறுபட்டது. அந்த உலகத்தில் கடந்த காலம் குறித்த கவலையோ, எதிர்காலம் குறித்த அச்சமோ இருக்காது. நிகழ்கால மகிழ்ச்சி மட்டுமே அக்குழந்தையின் நீண்ட ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும்.

நமது கொண்டாட்டங்களுக்கு மத்தியில், நம் வாழ்வை மகிழ்விக்க உலகிற்கு வந்துள்ள குழந்தைகளுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவிப்பது அவசியம்.

குழந்தைகள் அப்பாவித்தனம், ஆர்வம் மற்றும் எல்லையற்ற ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும் போது நமக்கு கிடைக்கு உணர்வும் உற்சாகமும் வரும் ஆண்டு முழுவதையும் மகிழ்ச்சியில் திளைப்பதற்கான உணர்வுகளை ஒரு நொடிகளில் தந்துவிட்டு போக வல்லது.

வயதில் பெரியவர்கள் என்ற முறையில், அவர்களின் உற்சாகத்தைத் தூண்டிவிட்டு, பெரிய கனவு காண அவர்களைத் தூண்டுவது அவசியமாகிறது.

  • ”குழந்தைகள் சிரிப்பில் குடும்பம் செழிக்கிறது! புத்தாண்டு உங்களுக்கு பிடித்த விசித்திரக் கதையை போல சுவாரஸ்யமாகவும் பிரகாசமாகவும் அமையட்டும்!"
  • "உற்சாகமும், சாகசங்களும் நிறைந்த ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்! கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் வலிமையாகவும், புத்திசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் வளருங்கள்"
  • ”இந்தப் புத்தாண்டு மாயாஜால தருணங்களால் நிரப்பப்படட்டும், உங்கள் கனவுகளை ஒரு நட்சத்திரத்தைப் போல உச்சியில் நிறுத்தட்டும்!”
  • "நீங்கள் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும்போது, ​​ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக்கும் அன்பு, சிரிப்பு, நண்பர்கள் உங்களை எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்த்துகள்"
  • "புத்தாண்டில் உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, முடிவில்லாத சிரிப்பு அமைய வாழ்த்துக்கள்! உங்கள் புன்னகையால் ஒவ்வொரு தருணத்தையும் பிரகாசமாக்குங்கள்!”
  • "புத்தாண்டு உங்களை அன்புக்குரியவர்களுடன் நெருக்கமாகக் கொண்டுவரட்டும்; உங்கள் இதயத்தை அரவணைக்கும் நினைவுகளை உருவாக்கட்டும்"

புத்தாண்டை நாம் வரவேற்கும் வேளையில், நம் குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், உயர்த்தவும், அவர்களின் இதயங்களை எல்லையற்ற மகிழ்ச்சியால் நிரப்பவும் வாழ்த்துக்களை பொழிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் புன்னகையிலும் சிரிப்பிலும், பருவத்தின் உண்மையான மாயாஜாலங்கள் நிறைந்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி