தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாதங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்; உங்கள் தேவதைகளுக்கு வைத்து மகிழுங்கள்! அர்த்தம் நிறைந்தது!

மாதங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்கள்; உங்கள் தேவதைகளுக்கு வைத்து மகிழுங்கள்! அர்த்தம் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil

Nov 23, 2024, 04:52 PM IST

google News
மாதங்களை அடிப்படையாகக்கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மாதங்களை அடிப்படையாகக்கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாதங்களை அடிப்படையாகக்கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற அழகிய பெயர்கள். மாதங்களில் இருந்த பெறப்பட்டவை. இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயரை சூட்டும்போது, சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீக பெயர்களைச் சூட்டுகிறார்கள். ஆன்மீக மாதத்தின் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு சில பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அந்த மாதத்தின் பெயர்களே ஏற்றதாக இருக்கும். தமிழ் மாதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொதுவான பெயர்கள் இவை. இவற்றை உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைத்து அழகு பார்க்கலாம். மேலும் இவை அர்த்தமுள்ள பெயர்கள் என்பதாலும், இவர்களுக்கு இந்த பெயர் வெற்றியைக் கொண்டுவரும். அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும்.

சைத்தாலி

இந்து காலண்டரில் உள்ள சைத்ரா மாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் கைத்தாலி. இதற்கு சைத்ரா மாதத்தில் பிறந்த பெண் குழந்தை என்று பொருள். புதிய துவக்கம். சித்திரை மாதம் எப்படி துவக்கவேமா, அதேபோல், புதிய துவக்கம் என்ற அர்தத்தை இந்தப்பெயர் கொடுக்கும். புத்துணர்ச்சி, புதுப்பித்தல், மனதை மயக்கும் வண்ணங்கள் என இதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது.

வைஷ்ணவி

வைகாசி என்ற இரண்டாவது மாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். வைகாசி என்பது லட்சுமி தேவியின் பெயர். இந்தப்பெயருக்கு விஷ்ணுவை வணங்குபவர் என்ற பொருளும் உள்ளது. இது செல்வம், கருணை மற்றும் தெய்வீக நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கும்.

அஷ்மிதா

ஆடி, ஆவனி அடுத்த இரண்டு மாதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்தான் அஷ்மிதா. அஷ்மிதா என்றால் அதற்கு பெருமை, கல் போன்ற உறுதி கொண்டவர் என்று பொருள். இது பலம் மற்றும் மீண்டு எழும் குணம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

கார்த்திகா

கார்திகை என்ற 8வது மாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர் கார்த்திகா என்பதாகும். இதற்கு தெய்வீக ஒளி, வானில் மின்னும் நட்சத்திரம் என எண்ணற்ற பெயர்கள் உள்ளது. இது ஒளி மற்றும் வானில் உள்ள அற்புதங்களைக் குறிப்பதாகும்.

ஃபல்குனி

ஃபல்குனி என்றால் பங்குனி என்ற 12வது மாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். பங்குனி உத்திரத்தன்று தோன்றும் வெளிச்சமான நட்சத்திரம் என்று பொருள். இது செல்வம் மற்றும் வெளிச்சத்தைக் காட்டுகிறது.

ஹிமானி

ஹிமானி என்றால் குளிர் மாதங்களை குறிக்கும் வகையில் வைக்கப்படும் பெயராகும். இதற்கு பொருள் தங்கம் அல்லது பனிக்கால அழகு என்று பொருள். இது ஒளி மற்றும் அமைதியை பிரதிபலிக்கும் பெயராகும்.

சமிதா

சமிதா என்றால், புனித வாசகம் அல்லது எண்ணற்ற என்று பொருள் தரும். இதற்கு ஞானம் மற்றும் முற்று என்று பொருள்.

ஷாந்தா

ஷாந்தா என்றால் அமைதியான என்று பொருள். இதற்கு அமைதி, கருணை, நிசப்தம் என்று பொருள். சாந்தம் என்பது குளிர் மாதங்களின் நிலை. அந்த மாதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி