தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Moringa Leaves Powder : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளேபினை அதிகரிக்க இந்த ஒரு பொடி மட்டும் போதும்!

Moringa Leaves Powder : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளேபினை அதிகரிக்க இந்த ஒரு பொடி மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil

Sep 28, 2024, 11:54 AM IST

google News
Moringa Leaves Powder : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளேபினை அதிகரிக்க இந்த ஒரு பொடி மட்டும் போதும். முருங்கைக்கீரைப் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Moringa Leaves Powder : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளேபினை அதிகரிக்க இந்த ஒரு பொடி மட்டும் போதும். முருங்கைக்கீரைப் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Moringa Leaves Powder : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளேபினை அதிகரிக்க இந்த ஒரு பொடி மட்டும் போதும். முருங்கைக்கீரைப் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முருங்கைக்கீரைப் பொடியை நீங்கள் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம். சில ஆர்கானிக் கடைகளிலும் கிடைக்கிறது. அங்கிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். முருங்கைக்கீரையை நீங்கள் அதிகளவில் வாங்கினால், அதை நீங்கள் ஒரே நாளில் காலி செய்ய முடியாது. எனவே அது மிச்சமாகும் அந்தக்கீரையை ஆய்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முருங்கைக்கீரை பொடி செய்வதற்கு முருங்கைக்கீரையை முதலில் காயவிடவேண்டும். கழுவி சுத்தம் செய்து நன்றாக ஆய்ந்து அதை காய வைக்கவேண்டும். நன்றாக பரப்பி ஒரு துணியைப்போட்டு மூடி 3 நாட்கள் நல்ல வெயில் காய வைத்து விடவேண்டும். நீங்கள் வீட்டிற்குள் வைத்து நிழலிலும் காய வைத்துக்கொள்ளலாம். நன்றாக காயவைத்து அரைக்கும்போதுதான் அழகான இந்த பச்சை நிறம் வரும்.

முருங்கைக்கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – ஒன்றரை கப்

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் – 2 ஸ்பூன்

வர மிளகாய் – 6

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் முருங்கைக்கீரையை நன்றாக ஆய்ந்துகொள்ளவேண்டும். பூச்சி மற்றும் பழுத்த இலைகளை நீக்கிவிடவேண்டும். ஒரு ஒரு கொத்தாக எடுத்து சுத்தம் செய்யும்போது நீங்கள் நன்றாக சுத்தம் செய்ய முடியும். நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து அலசி தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் நன்றாக பரப்பி வைக்கவேண்டும். அதிக தண்ணீர் இருந்தால் பிழிந்து எடுத்துவிடவேண்டும். நல்ல காயும் வரை உலர விடவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வரமிளகாய், கடலை பருப்பு, உளுந்து, வரமல்லி விதைகள், மிளகு என அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும்.

பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவேண்டும். சீரகத்தை மட்டும் கடைசியாக சேர்த்து வறுக்கவேண்டும். இதை எடுத்து ஆறவைத்துவிடவேண்டும்.

அடுத்து மூன்று நாட்கள் காயவைத்த முருங்கை கீரையையும் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். இலையை வறுக்கும்போது மிகவும் கவனம் தேவை. இலை கருகிவிடக்கூடாது. இதை செய்யும்போது முழுவதுமே அடுப்பு குறைவான தீயில் இருக்கவேண்டும்.

இந்தப்பொடிக்கு தேவையான அனைத்தை அரைக்கும்போதும் அடுப்பை குறைவான தீயிலே வைத்துக்கொள்ளுங்கள். கீரை மொறு மொறுவென வரும் வரை வறுக்கவேண்டும். பின்னர் அனைத்தையும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் மிளகாய், கட்டிப்பெருங்காயம் சேர்த்திருந்தீர்கள் என்றால் அதை அரைத்துக்கொண்டு, பின்னர் மற்றப்பொருட்களை அதனுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு நீங்கள் அரைத்து எடுத்தால் சூப்பர் சுவையான முருங்கைக்கீரைப்பொடி தயார்.

இதை சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள் இதை தினமும் சாப்பிடவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்துக்கள் குறைபாட்டை போக்க உதவும். குழந்தைகளுக்கு அனீமியா ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கும் இதை தினமும் கொடுக்கலாம்.

சூப் ரெசிபி

இந்தப்பொடியை அப்படியே சூப்பாகவும் வைக்க முடியும். வெங்காயம், பூண்டு, தக்காளி மூன்றையும் அரைகப் எடுத்து இந்தப்பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக்கொடுத்தால் சூப்பர் சுவையான முருங்கைக்கீரை சூப்பும் தயார்.

மழைக்காலத்தில் இதை அனைவரும் வழக்கமாக ஒரு வேளை காபி அல்லது டீக்கு பதில் எடுத்து வந்தால், மழைக்கால நோய்கள் அனைத்தும் அடித்து விரட்டப்படும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி