Moong Dal Payasam : தமிழ் புத்தாண்டுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இனிப்பு! பாசிப்பருப்பு பாயாசம்! இதோ ரெசிபி!
Apr 12, 2024, 09:57 AM IST
Moong Dal Payasam : இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.
தேவையானவை பொருட்கள்
பாசிப்பருப்பு – அரை கப்
பொடி நைலான் ஜவ்வரிசி – கால் கப்
பாகு வெல்லம் – ஒன்னே கால் கப்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
உடைத்த முந்திரிப்பருப்பு – 10
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடாயை லேசாக சூடாக்கி அதில் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவேண்டும். பாசிப்பருப்பு பொன்னிறமாகும்போது ஜவ்வரிசியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
பின் தண்ணீரில் இரண்டு முறை கழுவிவிட்டு ஒரு சிறிய குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 5 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பருப்பு வேகும்போது தட்டிய வெல்லத்தை அரை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்தவுடன், அடிக்கனமான பாத்திரத்தில் அல்லது வெண்கல பானையில் வடிகட்டி கொள்ளவேண்டும்.
குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவேண்டும். பின்னர் வெல்லத்தோடு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவேண்டும். ஒரு கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
பருப்பு நன்றாக வெல்லத்தோடு சேர்ந்ததும் சிறிது தேங்காய்ப்பாலை மெதுவாக சேர்த்து சிறிது நேரம் குறைந்த சூட்டில் வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவேண்டும்.
கடாயில் நெய்விட்டு சூடானதும், உடைத்த முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து சூடான பாயசத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பாசிபருப்பில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்
புரதச்சத்துக்கள் நிறைந்தது பாசிப்பருப்பு. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், திசுக்களை சரிசெய்து பலப்படுத்துகிறது. தசைகள், எலும்புகள், ரத்தம், குருத்தெலும்பு, ரத்தம் மற்றும் சருமம் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.
100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது.
இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.
இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
பாசிபருப்பு, கோலேசிஸ்டோகினின் என்ற ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிட்ட பின்னர், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
இதில் உள்ள இரும்பு மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்புக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.
இயல்பில்லாத இதய துடிப்பை முறைப்படுத்துகிறது. எளிதாக செரிக்கக்கூடிய, மிதமான பாசிப்பருப்பு, உயர் ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகிறது. இதய நோய்களையும் குறைக்க உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது
பாசிப்பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.
இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.
இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் பாசிப்பருப்பில், 40.5 முதல் 71 சதவீதம் அளவு தினசரி ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது.
இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது. முளைக்கட்டிய பாசிப்பருப்பில், குலோபுளின் மற்றும் அல்புமின் உள்ளது. இதனால் முளைக்கட்டிய பயிரில் 85 சதவீதம் அமினோ அமிலங்கள் உள்ளது.
நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது
இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
ஃபேட்டி ஆசிட் தொடரை உருவாக்குகிறது. இது வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. அது வாயுக்கள் கட்டிக்கொள்வதை தடுக்கிறது. இது எளிதாக செரிக்கக்கூடியது. ஆரோக்கியமாக உடலை பராமரிக்க உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
பாசிப்பருப்பில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. உடலில் அனீமியாவை தடுத்த ரத்தத்தில் போதிய அளவு சிவப்பணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். மேலும் உடலின் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்