தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Methi Matar Masala : மேத்தி மட்டர் மசாலா – பூரி, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டிக்கு அடிச்சுக்க முடியாத சுவையில் சைட்டிஷ்!

Methi Matar Masala : மேத்தி மட்டர் மசாலா – பூரி, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டிக்கு அடிச்சுக்க முடியாத சுவையில் சைட்டிஷ்!

Priyadarshini R HT Tamil

Nov 06, 2023, 04:00 PM IST

google News
Methi Matar Masala : மேத்தி மட்டர் மசாலா செய்து பாருங்கள். பூரி, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டிக்கு அடிச்சுக்க முடியாத சுவையில் சைட்டிஷ். மீண்டும், மீண்டும், சாப்பிட தூண்டும்.
Methi Matar Masala : மேத்தி மட்டர் மசாலா செய்து பாருங்கள். பூரி, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டிக்கு அடிச்சுக்க முடியாத சுவையில் சைட்டிஷ். மீண்டும், மீண்டும், சாப்பிட தூண்டும்.

Methi Matar Masala : மேத்தி மட்டர் மசாலா செய்து பாருங்கள். பூரி, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டிக்கு அடிச்சுக்க முடியாத சுவையில் சைட்டிஷ். மீண்டும், மீண்டும், சாப்பிட தூண்டும்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

வர மிளகாய் – 1

முந்திரி – ஒரு கைப்பிடி

பூண்டு – 8 பல்

கறிவேப்பிலை – 1 கொத்து

பெரிய வெங்காயம் – 1 (நகுறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பிரியாணி இலை – 1

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெந்தய கீரை – ஒரு கட்டு

பட்டாணி – 1 கப்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பால் – 1 கப்

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் வெந்தயக்கீரை ஒரு கட்டை சுத்தம் செய்து, நறுக்கி, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து, பச்சை மிளகாய், வர மிளகாய், முந்திரி, பூண்டு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம், தக்காளி, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் வதங்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.

அனைத்தையும் வதக்கி, ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மையாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில், வெண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்க வேண்டும். அதில் அரைத்த விழுதையும் சேர்த்து இன்னும் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.

அதில் பட்டாணியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர் வதக்கிய கீரையை சேர்த்து, கடைசியாக கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால், அட்டகாசமான மேத்தி மட்டர் கிரேவி சாப்பிட தயாராக உள்ளது.

இதை நீங்கள் சப்பாத்தி, ரொட்டி, நான், பரோட்டா, பூரி என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுவையும் அள்ளும். ஒருமுறை சுவைத்தால் மீண்டும், மீண்டும் சுவைக்க விரும்புவீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி