Manathakkali Keerai Benefits : மணமணக்கும் விருந்துகள் வைக்கலாம்! மணத்தக்காளி கீரை உடலில் செய்யும் மாயங்கள் என்ன?
Apr 19, 2024, 04:39 PM IST
Manathakkali Keerai Benefits : கொசுப்புழுக்களின் லார்வாக்களை மணத்தக்காளியின் காய் மற்றும் பழம் இரண்டும் அழிக்கிறது. கொசுக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வரும் காலங்களில், கொசுக்களை அழிப்பதற்கு நாம் இயற்கை பொருட்களை தேடவேண்டியுள்ளது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
மணத்தக்காளி கீரை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் வயோதிகத்தை விரைவுப்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்கள்களை அழிக்கும். ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.
புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்
மணத்தக்காளியில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் நிறைந்துள்ளது. இது கீமோதெரபி மூலமே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆனால் நிறைய மூலிகைகளை புற்றுநோயை தடுக்கிறது. அதில் மணத்தக்காளியும் ஒன்று. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. வாய்ப்புற்று மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள்
மணத்தக்காளி, நீரிழிவு நோயாளிகளுக்கு பாரம்பரியமான மருந்து மற்றும் உணவு என்றே கூறலாம். இது ஆய்வுகளின் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலிகளில் நடந்த ஆய்வில் மணத்தக்காளி தண்ணீரை பருகிய எலிகளுக்கு நீரிழிவு நோய் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீரிழிவுக்கு மருந்தாகிறது.
அழற்சிக்கு எதிரான குணங்கள்
மணத்தக்காளி கீரையில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதை சாப்பிடுவதாலும், வெளியில் தடவுவதாலும் உங்களுக்கு உதவுகிறது. இது மணத்தக்காளியில் உள்ள ஆல்கலாய்ட்களால் நடக்கிறது. சொலானின் என்ற உட்பொருள் மணத்தக்காளியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. வலி, வீக்கம் இருப்பவர் மணத்தக்காளி கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆஸ்மாவுக்கு எதிரான குணங்கள்
மணத்தக்காளி கீரையில் உள்ள அதன் பழங்களில், ஆஸ்துமாவுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. பெட்ரோலியம் ஈத்தரில் ஆஸ்துமாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அதையும் பயன்படுத்தலாம் அல்லது மணத்தக்காளி பழங்களையும் உட்கொண்டு ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்தப்பழங்களில் உள்ள காம்பவுண்ட் பீட்டா சிட்டோஸ்ட்ரோல் என்ற உட்பொருளால் ஏற்படுகிறது.
அல்சருக்கு எதிரான குணங்கள்
மணத்தக்காளியில் அல்சருக்கு எதிரான குணங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி இலைகளை தேங்காய்ப்பாலுடன் வேகவைத்து சூப்பாக்கி கொடுத்தால், அது அவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். மணத்தக்காளி உடலில் அல்சரை உண்டாக்கும் அமிலங்கள் உற்பத்தியாவதை தடுக்கும் தன்மைகொண்டது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வலிப்புக்கு எதிரான குணங்கள்
நைஜீரியா போன்ற நாடுகளில் மணத்தக்காளி இலைகள் வலிப்பு நோயாளிகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ்களுக்கு எதிரான குணங்கள்
வைரஸ்களுக்கு எதிரான குணங்கள் கொண்டது மணத்தக்காளி இலைகள். இது ஹெப்பாடிடிஸ் சியை எதிர்க்கும் தன்மைகொண்டது. இது கல்லீரலை பாதிக்கும் மிக முக்கியமாக பிரச்னையாகும். இதில் உள்ள மெத்தனால் மற்றும் க்ளோரோஃபார்ம் சாறுகள் மிகவும் சக்திவாய்ந்தவை.
கொசுப்புழுக்களின் லார்வாக்களை அழிக்கிறது
கொசுப்புழுக்களின் லார்வாக்களை மணத்தக்காளியின் காய் மற்றும் பழம் இரண்டும் அழிக்கிறது. கொசுக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வரும் காலங்களில், கொசுக்களை அழிப்பதற்கு நாம் இயற்கை பொருட்களை தேடவேண்டியுள்ளது.
கல்லீரலை காக்கிறது
மணத்தக்காளியில் சிறப்பான கல்லீரல் பாதுகாக்கும் திறன் உள்ளது. இது கல்லீரல் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்