Citrus Fruits: சிட்ரஸ் பழங்களுடன் இந்த உணவுகளை தப்பி தவறியும் சாப்பிட வேண்டாம்! விளைவு மோசம் தானாம்
Feb 03, 2024, 03:05 PM IST
உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் சூப்பர் உணவாக சிட்ரஸ் பழங்கள் இருந்து வந்தாலும் இவற்ற சில உணவுகளோடு சேர்ந்து, இணைந்தோ எடுத்துக்கொள்ள கூடாது என ஆயுர்வேத முறைப்படி கூறப்படுகிறது.
ஒட்டு மொத்த உடல் நலத்தை பேனி காப்பிதில் உங்களது உணவு டயடில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கிய உணவில் சிட்ரஸ் பழங்கள் இடம்பெறுகின்றன. தாவரங்களின் சேர்மானங்கள், பிளேவனாய்ட்கள், நார்ச்சத்துகள், மைக்ரோ நியூட்ரியன்ட்கள் என ஏராளமான சத்துக்கள் சிட்ரஸ் பழங்களில் இடம்பிடித்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடல் அழற்சிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் கொண்டிருக்கும் சிட்ரஸ் பழங்களை சில உணவுகளுடன் இணைந்து சாப்பிடக்கூடாது என ஆயுர்வேத மருத்துவ முறையில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த காம்பினேஷன் நச்சாக மாறி பல ஆரோக்கிய பிரச்னைகளை தரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரஸ் பழங்கள் பொதுவாக அமிலத்தன்மை மிக்கதாக இருக்கிறது. பித்தத்தை உருவாக்கும் உடல் உஷ்ண ஒழுங்குமுறையிலும், கபத்தை உருவாக்கும் நீர் இருப்பு ஒழுங்குமுறையிலும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சிட்ரஸ் பழங்களுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடுவதால், சரும பிரச்னை, குடல் ஆரோக்கியம், கல்லீரல் செயல்ப்பாட்டில் தாக்கம் போன்றவையும் ஏற்படலாம். சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து கொள்ள கூடாத உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.
வெள்ளரி போன்ற நீர்சத்து மிக்க காயற்கறிகளுடன் கூடாது
வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிரிணி போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களுடன் இணையக்கூடாது. அவ்வாறு செய்தால் உடல் பித்தத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் வயிறு வீக்கம், உப்புசம் அடைதல், அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவை நிகழும்
தயிர்
தயிர் மற்றும் யோகார்டுடன் சிட்ரஸ் பழங்கள் சேர்ந்தால் பித்தம், கபத்தை அதிகரித்துவிடும். ரத்தத்தில் பித்தத்தை அதிகரித்து நெரிசலை ஏற்படுத்துகிறது. சருமத்திலும் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என கூறப்படுகிறது.
பால்
உங்கள் டயட்டில் பால் இடம்பெற்று இருந்தாலே அதில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனுடன் உப்பு, புளிப்பு மிக்க உணவுகளை சேர்ப்பதால் செரிமானம் கடினமாகும். இதன் விளைவாக நச்சுக்கள் ஏற்படுகிறது. உடல் அமைப்புக்கு அதிக பழுவை கொடுப்பதோடு, சரும் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கிறது
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
விரதம் கடைப்பிடித்து நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்த பிறகு அல்லது வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிட கூடாது. இது பித்தத்தை அதிகரிக்கும். எனவே உண்ணாவிரதத்தை சிட்ரஸ் பழங்களை வைத்து முடிக்க கூடாது.
காரசாரமிக்க உணவுடன் சாப்பிட கூடாது
காரசாரமான உணவுகளுடனோ அல்லது சாப்பிட்ட பின்னரோ சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் குடலில் எரிச்சல் ஏற்படும். அத்துடன் கல்லீரல் செயல்பாட்டுக்கும் பாரமாக இருக்கும்.
உப்பு மிக்க உணவுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
சிட்ரஸ் பழங்களில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உப்புச்சத்து, கொழுப்பு சத்து மிக்க உணவுகள் குடல் செயல்பாட்டில் விளைவை ஏற்படுத்தும். இதனால் உடல் உஷ்ணம், அமிலத்தன்மை அதிகரிக்கலாம்.
அதேவேளையில் மேற்கூறிய உணவுகளை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குறைந்தது 30 நிமிடமாவது இடைவேளை விட்டு சாப்பிட வேண்டும். சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலத்தன்மையை குறைப்பதற்கு மிளகு, கருப்பு உப்பு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். இது பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலையை நன்கு பராமரிக்க உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்