தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Health : ஒரு வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்?

Liver Health : ஒரு வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்?

Priyadarshini R HT Tamil

Jul 02, 2024, 11:11 AM IST

google News
Liver Health : ஒரு வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Liver Health : ஒரு வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Liver Health : ஒரு வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நீங்கள் சோர்வாகவோ, வயிற்றில் அசவுகர்யமாகவோ உணர்ந்தீர்கள் என்றால், அதற்கு காரணம் உங்கள் வயிற்றுப்பகுதியில் அதிகம் சேர்ந்துள்ள கொழுப்புதான். எனவே இதுதான் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்வதற்கான நேரம் ஆகும்.

அதற்கு உங்களுக்கு இந்த 4 பொருட்கள் மட்டுமே உதவும். கல்லீரல் ஆரோக்கியமே முழு உடல் ஆரோக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலின் முக்கிய பாகங்களைவிட அதிக வேலைகளை இந்த கல்லீரல்தான் செய்கிறது. எனவே அதை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்

செலரி – ஒரு கொத்து

இதில் பொட்டாசியம், ஃபோலோட் போன்ற ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இதனால் இது கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. அது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

பீட்ரூட் – 1

பீட்ரூட் கல்லீரலை சுத்தம் செய்வதற்கு உதவும் முக்கிய உட்பொருள் ஆகும். இதில் உள்ள பீட்டைன் என்ற பொருள், கல்லீரல் செல்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை அகற்றக்கூடியது. இது கழிவுநீக்க செயல்பாட்டை அதிகரித்து, கல்லீரலை மேம்படுத்துகிறது.

கிரீன் ஆப்பிள் – 1

ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் வயிற்றில் உள்ள கனமான பொருட்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

ஆரஞ்ச் – 2

ஆரஞ்சில் உள்ள ஃபோலிக் அமிலம் கல்லீரல் தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.

செய்முறை

அனைத்தையும் சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆரஞ்சை பிழிந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் அரைத்து வடிகட்டி ஒரு வாரம் பருகினால்போதும். உங்களின் கல்லீரல் முற்றிலும் சுத்தமாகும்.

இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு நல்ல பலனைக்கொடுக்கவில்லையென்றால், இதை மூன்று வாரத்திற்கு தொடர்ந்து பருகவேண்டும். இது உங்கள் கல்லீரலை முற்றிலும் சுத்தம் செய்து தரும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி