Kovaikai Poriyal : கடலை வறுத்து போட்ட கோவக்காய் பொரியல் – வித்யாசமான சுவையில் அசத்தும்!
Sep 07, 2023, 04:00 PM IST
Kovaikai Poriyal : கோவக்காய் பொரியல் கடலை வறுத்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கோவக்காய் - 1/4 கிலோ நறுக்கியது (உங்களுக்கு தேவையான அளவில் வெட்டிக்கொள்ளுங்கள்)
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 15 பற்கள் தட்டியது
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தண்ணீர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலை பருப்பு, வேர்க்கடலையை கடாயில் சேர்த்து வறுக்கவேண்டும். பின்னர் நன்றாக ஆறியவுடன், கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்ததும் பெருங்காய தூள், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய கோவக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து வதக்கவேண்டும்.
தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்க வேண்டும். இறுதியாக அரைத்த வேர்க்கடலை தூள் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். சுவையான கோவக்காய் பொரியல் சாப்பிட தயாரக உள்ளது. இது வழக்கமான முறையை விட வித்யாசமாக இருக்கும்.
கோவைக்காய் ஒரு மகிழ்ச்சியை தரக்கூடிய காய். நாம் அனைவரும் விரும்பி உண்ணும் காய்கறி வகையைச் சேர்ந்தது. தென்னிந்தியாவில் இந்தக்காய் பரவலாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கோவக்காய் சாம்பார், கேவக்காய் வறுவல் மற்றும் கோவக்காயில் பல்வேறு கிரேவி வகைகளை செய்து சாப்பிடலாம். எப்படி செய்தாலும் கோவக்காய் ருசியாக இருக்கும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது கோவக்காய் எளிய பொரியல். இதை சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் செய்யலாம்.
டாபிக்ஸ்