Kongu Style Brinjal Thokku : கொங்கு ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் தொக்கு! சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்!
May 26, 2024, 09:13 AM IST
Kongu Style Brinjal Thokku : கொங்கு ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.
Kongu Style Brinjal Thokku : கத்தரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காத உணவு. ஆனால் கத்தரிக்காயை சுட்டு இதுபோல் செய்து சாப்பிட்டு பாருங்கள். கத்தரிக்காயை வெறுப்பவர்களும், இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கொங்கு ஸ்டைலில் செய்யப்படும் கத்தரிக்காய் தொக்கு. இதை டிஃபனுக்கு தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 6
புளி – நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு ‘
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 8 பல் (இடித்தது)
வர மிளகாய் – 4
செய்முறை
கத்தரிக்காயை ஒரு குச்சியிலி குத்தி அடுப்பில் காட்டி சுட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். சுட்ட கத்தரிக்காய்களின் தோலை உரித்து, தண்ணீரில் நன்றாக கழுவிக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் புளிகரைசலையும் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.
பின்னர் கடாயின் எண்ணெய் சூடாக்கி கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதில் சின்ன வெங்காயத்தையும்,,இடித்த பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இதில் மஞ்சள் தூள் மற்றும் போதிய அளவு உப்பு சேர்த்து மசித்து வைத்துள்ள கத்தரிக்காய், புளிக்கரைசலை சேர்க்கவேண்டும்.
நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய் தொக்கு தயார். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், களி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
குறிப்புகள்
கத்தரிக்காயை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட சுட்ட கத்தரிக்காய் தொக்கை விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பாக குழந்தைகள் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு சுவையில் செய்யும்போது, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கத்தரிக்காயில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் எந்த ஒன்றை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு மீடியம் சைஸ் கத்தரிக்காய் போதும்.
கத்தரிக்காயை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குவேண்டும். முற்றியதாக அல்லாமல், பூச்சிகள் இல்லாததாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
கத்தரிக்காயின் நன்மைகள்
கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.
அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.
இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.
கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.
டாபிக்ஸ்