Breast Cancer Symptoms: மார்பக புற்று நோய் பாதிப்பு! இந்த அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்
Feb 25, 2024, 08:26 PM IST
மார்பக புற்றுநோயை வெளிப்படுத்தும் 5 முக்கியமான அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்று இருப்பதை உணர்ந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை தவறாமல் பெற வேண்டும்.
உலக அளவில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தகூடிய நோயாக மார்பக புற்று நோய் இருந்து வருகிறது. வரும் நாள்களில் இந்த நோய் பாதிப்பானது அதிகரிக்கூடும் என மருத்துவர்கள் அபாயம் தெரிவித்துள்ளனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொள்ளலாம். அப்போதிருந்தே சிகிச்சை பெற தொடங்கினால் இதன் ஆபத்தை பெருமளவு குறைத்து விடலாம்
மார்பகத்தில் வழக்கத்துக்கு மாறான கட்டி அல்லது கட்டி வடிவங்கள் தோன்றினால் அலட்சியம் காட்ட வேண்டாம். தொடர்ச்சியாக மார்பகங்களில் இதுபோன்ற வீக்கங்கள், கட்டிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கட்டிகள் உருவாவதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை பெறலாம்.
- மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம். உங்களது மார்பகங்கள் வழக்கத்துக்கு மாறான வடிவத்தில் இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- மார்பக புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக தலைகீழான முலைக்காம்பு (வெளியே வருவதற்குப் பதிலாக உள்ளே திரும்புவது) இருப்பதாகும். இந்த பாதிப்பில் மார்பகத்தில் உள்ள தொராசிக் குழாய் மார்பகத்துக்குள் நகர்கிறது. இந்த அறிகுறியை கவனித்த மறுகணமே மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
- மார்பகத்தில் உள்ள நிறத்தின் வண்ணத்தில் மாறுபாடு ஏற்படுவது. உங்களது மார்பகங்கள் சிவப்பு நிறத்தில், ஆரஞ்சு நிறங்களில் மாறுவது மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகளில் ஒன்றாக உள்ளது.
- மார்பக முளைக்காம்பை சுற்றிய தோல் பருதிகள் கருமையாவது. இந்த பகுதியில் தோல்கள் கடினமானாலோ அல்லது பெருத்து காணப்பட்டாலோ கவனம் கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும்.
- 40 வயதை கடந்த பெண்களின் மார்பகங்கள் பொதுவாகவே வழக்கத்தை விட பெரிதாகும். இந்த நேரத்தில் கவனமாக இருக்க மோமோகிராம் சிகிச்சை முறை சீரான இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்