தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kiss Day 2024: ’உங்கள் காதலிக்கு எங்கே முத்தம் தர போகிறீர்கள்?’ 7 விதமான முத்தங்களும் அதன் அர்த்தங்களும்!

Kiss Day 2024: ’உங்கள் காதலிக்கு எங்கே முத்தம் தர போகிறீர்கள்?’ 7 விதமான முத்தங்களும் அதன் அர்த்தங்களும்!

Kathiravan V HT Tamil

Feb 12, 2024, 02:20 PM IST

google News
“Kiss Day 2024: காதல் வயப்பட்டவர்கள் இந்த நாளில் ஒரு முத்தத்துடன் தங்கள் உறவை முத்திரையிடுகிறார்கள். உறவுகளில், முத்தம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்குகிறது” (Photo by Spencer Davis on Unsplash)
“Kiss Day 2024: காதல் வயப்பட்டவர்கள் இந்த நாளில் ஒரு முத்தத்துடன் தங்கள் உறவை முத்திரையிடுகிறார்கள். உறவுகளில், முத்தம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்குகிறது”

“Kiss Day 2024: காதல் வயப்பட்டவர்கள் இந்த நாளில் ஒரு முத்தத்துடன் தங்கள் உறவை முத்திரையிடுகிறார்கள். உறவுகளில், முத்தம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்குகிறது”

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஒருநாள் முன்னதாக பிப்வரவரி 13 ஆன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. காதல் வயப்பட்டவர்கள் இந்த நாளில் ஒரு முத்தத்துடன் தங்கள் உறவை முத்திரையிடுகிறார்கள். உறவுகளில், முத்தம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்குகிறது. 

பிரஞ்சு முத்தம் (French kiss): இது காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சிமிக்க முத்தத்தின் ஒரு வடிவம். இது பொதுவாக ஒருவரையொருவர் ஆழமாக ஈர்க்கும் அல்லது ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

கழுத்து முத்தம் (Neck kiss):  கழுத்தில் முத்தமிடுவது உடலுறவுக்கான நோக்கங்களை வெளிப்படையாக கூறுவதாக அமைகிறது. காதலில் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர்களால் இந்த முத்தங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

காது மடல் முத்தம் (Ear lobe kiss): உணர்வுப்பூர்வமான அன்மை வெளிப்படுத்த காது மடல்களில் முத்தம் இடுவதை காதலர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். 

கன்னத்தில் (On the cheek): ஒருவர் மீது நாம் கொண்டுள்ள பாசம் மற்றும் நெருக்கத்தை வெளிப்படுத்த கன்னத்தில் முத்தம் இடப்படுகிறது.  

மூக்கு முத்தம் (Nose kiss): முத்தங்களின் அழகான வடிவங்களில் ஒன்று, இது காதலில் இருப்பவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

நெற்றியில் முத்தம் (Forehead kiss): வாழ்கை துணை மீது நாம் கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியில் முத்தமிடப்படுகிறது.  இது நாம் கொண்டுள்ள அன்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது. 

கைகளில் முத்தம் (On the hands): காதல் உறவைத் தொடங்கும் தொடக்கமாக கைகளில் முத்தம் இடுதல் உள்ளது. பல கலாச்சாரங்களில் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக செய்யப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி