Kambu Soru: ஊட்டச்சத்தில் நிகரில்லாத கிராமத்துக் கம்பஞ் சோறு!
Dec 13, 2022, 11:29 PM IST
ஊட்டச்சத்தில் நிகரில்லாத கிராமத்துக் கம்பஞ் சோறு செய்முறை குறித்து இங்கு காணலாம்.
ஊட்டச்சத்தில் நிகரில்லாத கிராமத்துக் கம்பஞ் சோறு செய்முறை குறித்து இங்கு காணலாம்.
கம்பஞ் சோறு செய்வதற்குத் தேவையானப் பொருட்கள்:
1 கப் - கம்பு
3 கப் - தண்ணீர்
தேவையானஅளவு - உப்பு
செய்முறை:
ஸ்டெப் 1
கம்பை சுத்தம் செய்து தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஸ்டெப் 2
தண்ணீரை வடிகட்டி சிறிது நேரம் வைத்திருக்கவும்.
மிக்ஸியில் கொரகொரப்காக அடித்து கொள்ளவும்.
ஸ்டெப் 3
3 கப் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
ஸ்டெப் 4
தண்ணீர் கொதித்த பின்னர் கம்பு சேர்த்து கிளறவும்.
ஸ்டெப் 5
கம்பு வெந்து கெட்டிபட்டவுடன் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஸ்டெப் 6
புளிக்குழம்பு, கொண்டைக்கடலைக் குழம்பு, சாம்பார், தயிர்,மோர் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.