Kambu Koozh: ஆடி வெள்ளியில் அம்மனுக்கு படைக்கும் கம்மங் கூழ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க
Jul 21, 2023, 10:10 AM IST
தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கம்பங்கூழ் செய்முறையை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக ஆடி மாதங்களில் தமிழகத்தில் அம்மன் வழிபாடு அதிகமாக செய்யப்படும். அதிலும் குறிப்பாக அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவது சிறந்த நன்மைகளை தரும் என்று நம்பப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கம்பங்கூழ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு
உப்பு
தண்ணீர்
தயிர்
செய்முறை
கம்பை நன்றாக கழுவி ஒரு 15 நிமிடம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். அதில் கம்பிற்கு தேவையான உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கம்பிற்கு 4 கப் தண்ணீரை அடி கனமான பாத்திரத்தில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீர் நன்றாக கொத்தித்த பின் ஏற்கனவே அரைத்து தண்ணீரில் கலங்கி வைக்கப்பட்டுள்ள கம்பு மாவை கலந்து நன்றாக கிளற வேண்டும். தொடர்ச்சியாக கிளறா விட்டால் கம்பு மாவு கட்டி பட்டு விடும். இதனால் தொடர்ச்சியாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை கிளறிய பின் கம்பு மாவு திக்கான பதத்திற்க மாறிவிடும். பொதுவான இந்த கூழை இரவில் தயார் செய்து வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து பார்க்கும் போது கூழ் கெட்டியாக மாறி இருக்கும். இதை தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். தேவையானால் சுவைக்காக உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த கூழ்க்கு சின்ன வெங்காயம், ஊறுகாய், வந்தல், பச்சை மாங்காய் போன்றவை அட்டகாசமான காமினேஷசன்.
கம்பின் நன்மைகள்
கம்பு வயிற்றிற்கு இதம் தரும் ஒரு உணவுப்பொருளாகும். இதில் இரும்புச்சத்து நிறைந்த கம்பில் ஏராளமான துத்தநாகம் உள்ளது. மலச்சிக்கல், பித்தப்பை கற்கள் உருவாகுவதை தடுக்க உதவும். ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. கொழுப்பு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மன அமைதியை அளிக்கவும் உதவுகிறது.
இத்தனை நன்மைகள் உள்ள கம்பங் கூழை ஆடிமாதத்தில் மட்டும் இல்லாமல் வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்