தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நுரையீரலை வலுப்படுத்த இந்த காய் மட்டும் 4 போதும்! இதை ஒரு வாரம் செய்து பாருங்க! கைமேல் பலன்!

நுரையீரலை வலுப்படுத்த இந்த காய் மட்டும் 4 போதும்! இதை ஒரு வாரம் செய்து பாருங்க! கைமேல் பலன்!

Priyadarshini R HT Tamil

Oct 13, 2024, 12:42 PM IST

google News
நுரையீரலை வலுப்படுத்த இந்த காய் மட்டும் 4 போதும். இதை ஒரு வாரம் செய்தாலே போதும். உங்கள் நுரையீரல் வலுப்பெறும்.
நுரையீரலை வலுப்படுத்த இந்த காய் மட்டும் 4 போதும். இதை ஒரு வாரம் செய்தாலே போதும். உங்கள் நுரையீரல் வலுப்பெறும்.

நுரையீரலை வலுப்படுத்த இந்த காய் மட்டும் 4 போதும். இதை ஒரு வாரம் செய்தாலே போதும். உங்கள் நுரையீரல் வலுப்பெறும்.

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நுரையீரல்

நுரையீரல் உடலின் முக்கிய உறுப்பாகும். ஏனெனில் நுரையீரல்தான் நாம் உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடலுக்கு தேவையற்ற கார்பன்டைஆக்ஸைடை வெளியேற்றுகிறது. உங்கள் சுவாச மண்டலத்தில் அதிக பங்கு வகிப்பது நுரையீரல்கள்தான். உங்கள் சுவாச மண்டலத்தில் மண்டலம் சுவாசத்துக்கு தேவையான உறுப்புகள் மற்றும் திசுக்களால் ஆனது. ஒருவருக்கு இரண்டு நுரையீரல் உள்ளது. நெஞ்சின் இருபுறத்திலும் அது உள்ளது. கழுத்துக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரல் உள்ளது.

நுரையீரலின் இயக்கம்

உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கொடுத்து, உடலில் இருந்து மற்ற வாயுக்களை நுரையீரல் வெளியேற்றுகிறது. ஒரு நிமிடத்தில் 12 முதல் 20 முறை இது நடக்கிறது. உங்கள் வாய் அல்லது மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்று, தொண்டையின் பின்புறத்தின் வழியாக, வாய்ஸ் பாக்ஸில் சென்று, காற்று குழாயில் புகுகிறது. உங்கள் மூச்சுக்குழாய், இரண்டாகப்பிரிகிறது. ஒன்று வலது புறத்தில் உள்ள நுரையீரலுக்குச் செல்கிறது. மற்றொன்று இடதுபுறத்தில் உள்ள நுரையீரலுக்குச் செல்கிறது. நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் மூச்சுகுழாய்கள் திறந்திருக்கவேண்டும். அப்போதுதான் உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்படும். அவற்றில் வீக்கம் மற்றும் அதிகப்படியான சளியும் இருக்கக்கூடாது.

உங்கள் மூக்கின் உள்ளே உள்ள சிறிய முடிகள்தான் உள்ளே செல்லும் காற்றை சுத்தப்படுத்துகின்றன. பெரிய துகள்ளை தடுக்கவும் செய்கிறது.

சளி மூச்சுக்குழாயில் உருவாகிறது, அது காற்று செல்லும் குழாய்களை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அழுக்குகளை தேக்கவும், பாக்டீரியாக்களையும், மற்ற குப்பைகளை பிடித்து வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

புகைபிடிப்பது உங்கள் மூக்கில் உள்ள சிறிய முடிகளை சரியாக செயல்படவிடாது. ஒரு நுரையீரலுடன் கூட உங்களால் வாழ முடியும். உங்கள் உடலில் மிதந்துகொண்டே இருக்கும் பாகங்களில் ஒன்று நுரையீரல். உடற்பயிற்சி உங்கள் நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

இந்த நுரையீரலில் ஆஸ்துமா உள்ளிட்ட எண்ணற்ற கோளாறுகள் ஏற்படுகிறது. உங்கள் நுரையீரலை வலுவாக்க உங்களுக்கு உதவும் இந்த பானம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 4

தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

வெண்டைக்காயை வெட்டிக்கொள்ளவேண்டும். அதை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்கவிடவேண்டும். வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். அப்போது உங்கள் நுரையீரல் வலுப்பெறும். இதை தொடர்ந்து ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் செய்ய வேண்டும்.

இதனுடன் வெற்றிலை சேர்த்து கொதிக்கவிட்டு பருகினால் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் இதை செராமிக் கத்தியில் நறுக்கினால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். இரும்பு கத்தியால் நறுக்கும்போது ஏற்படும் மெட்டல் கலப்பு இதில் நடக்காது. இந்த பானத்தை நீங்கள் கட்டாயம் எடுத்துப்பாருங்கள். இது உங்களுக்கு ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய அனைத்தையும் குறைக்க உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி