தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Japanese Techniques To Aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Priyadarshini R HT Tamil

Jul 21, 2024, 06:16 AM IST

google News
Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Japanese Techniques to aging : வயோதிகத்தை வரவிடாமல் தடுக்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வயோதிகத்தை தள்ளிப்போட முடியுமா என்றால், வயது ஆவதை தடுக்க முடியாது. ஆனால், வயதான தோற்றம் வருவதை தள்ளிப்போட முடியும். அதற்கு ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வயோதிக தோற்றம் தெரியாமல் இருக்க ஜப்பானியர்கள் செய்வது என்ன?

ஜப்பானியர்கள் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றவர்கள், அவர்களின் இளமை தோற்றத்துக்கும் புகழ்பெற்றவர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறையும், அவர்கள் நீண்ட நாட்கள் வாழவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுகிறது. வயதான தோற்றத்தை தவிர்க்க அவர்கள் சில குறிப்புகளை பின்பற்றுகிறார்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உணவுப்பழக்கம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அவர்கள் குறைவாகவே உட்கொள்கிறார்கள். அதில் அதிக சர்க்கரை இல்லை. அவர்கள் ஃபிரஷ் காய்கறிகள், பழங்கள், மீன், கடல் உணவுகள், சோயா பொருட்கள் மற்றும் அரிசி உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். இந்த உணவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. இவையிரண்டும்தான் வயோதிக தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.

கிரீன் டீ

ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது கிரின் டீ. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள கேட்சின்கள், நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. செல்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு கவசத்தைக் கொடுக்கிறது. வழக்கமாக கிரீன் டீ எடுத்துக்கொள்வது சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

அளவான உணவு

ஜப்பானியர்கள் அளவான உணவே எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வயிறு 80 சதவீதம் நிறைந்தவுடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறார்கள். இந்த பழக்கத்தால் அவர்களுக்கு உடல் பருமன் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. பருமனால்தான், எண்ணற்ற வயோதிகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுகிறது. அதிகம் சாப்பிடுவதை தடுக்கவும் உதவுகிறது. குறைவாக சாப்பிடும்போது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் குறைகிறது.

உடற்பயிற்சியை வழக்கமாக்குவது

ஜப்பானியர்கள் உடல் உழைப்பை தங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாகக்கொண்டுள்ளனர். அவர்கள் நடப்பது, சைக்கிளிங் செய்வது, பாரம்பரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தற்காப்பு கலைகளை கற்பது என அவர்கள் உடல் செயல்பாடுகளை அதிகம் போற்றுகிறார்கள். தொடர் உடற்பயிற்சி செய்வது, தசையை இறுக்கி, இதயத்தை வலுவாக்குகிறது. மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

சருமம்

சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பது, நீர்ச்சத்து, சுத்தம் செய்வது என சரும பாதுகாப்புக்கு அவர்கள் நேரம் ஒதுக்குகிறார்கள். கடற்பாசி, கிரீன் டீ மற்றும் அரிசி தவிடு என அவர்களை இளமையுடனும், ஆரோக்கியமான சருமத்துக்கும் சில இயற்கை முறைகள் உதவுகின்றன.

போதிய அளவு தண்ணீர்

போதிய அளவு தண்ணீர் பருகுவது, வயோதிகத்தை தடுக்கும் பழக்கங்களுள் ஒன்று. நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்ப்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது. ஜப்பானியர்கள் அடிக்கடி தண்ணீர் பருகுகிறார்கள். தேவையான அளவு தண்ணீர் பருகுவது ஜப்பானியர்களின் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, உடலில் உள்ள நச்சுக்களைப் போக்குகிறது.

மனஅழுத்ததை குறைக்கும் நடவடிக்கைகள்

மனஅழுத்த மேலாண்மையில் ஜப்பானியர்கள், தியானம், மனநிறைவு, இயற்கையுடன் நேரம் செலவிடுதல் போன்ற நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். மனஅழுத்தமே வயோதிகத்துக்கான காரணம் ஆகும். எனவே மனஅழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் எப்போதும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறார்கள்.

சமூக தொடர்புகள்

ஜப்பானிய கலாச்சாரத்தில், அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். அவர்கள் உறவுகளுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பார்கள். மனஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் என அனைத்தும், சமூகத்துடன் நல்ல தொடர்பில் இருப்பதுடன் தொடர்பு கொண்டது. இந்த தொடர்புடன் இருப்பவர்கள் அவர்களின் மனஅழுத்தத்தை மேலாண்மை செய்கிறார்கள். அவர்கள் நேர்மறை எண்ணத்துடன் வாழ்வை அணுகுகிறார்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி