தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jackfruit Payasam : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் பலாப்பழ பாயாசம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!

Jackfruit Payasam : தமிழ் புத்தாண்டை வரவேற்கும் பலாப்பழ பாயாசம்! இதோ இப்படி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil

Apr 13, 2024, 08:00 AM IST

google News
Jackfruit Payasam : தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இனிப்பு வகைகளுள் இன்று பலாப்பழ பாயாசம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Jackfruit Payasam : தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இனிப்பு வகைகளுள் இன்று பலாப்பழ பாயாசம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

Jackfruit Payasam : தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இனிப்பு வகைகளுள் இன்று பலாப்பழ பாயாசம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை வரவேற்க தமிழ் மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழ் புத்தாண்டில் கனி காண்பது, வேப்பம்பூ பச்சடி மற்றும் வேப்பம்பூ ரசம் வைப்பது மற்றும் இனிப்புகள் செய்வது, கோயில்களுக்கு சென்று வழிபாடுகள் நடத்துவது என்று கொண்டாட்டங்கள் இருக்கும்.

ஒவ்வொரு புத்தாண்டுக்கும் புதிதாக என்ன இனிப்பு செய்து வீட்டில் வழிபாடு நடத்த வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். இந்தப் புத்தாண்டுக்கு பலாப்பழ பாயாசம் செய்து அசத்துங்கள். அந்த டிஷ் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

பலாப்பழம் – 10 – 15

பொடித்த வெல்லம் – அரை கப்

கெட்டி தேங்காய்ப்பால் – அரை கப்

தேங்காய் பற்கள் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் நெய்யை உருக்கி, தேங்காய் பற்கள் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு, அதே கடாயில் நெய்யில் பலாப்பழங்களை வறுக்கவேண்டும்.

அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் குக்கரில் வைத்து வேகவைத்துக்கொள்ளலாம்.

இதை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில், அரைத்த பலாப்பழ விழுதுகளை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக வேகவைக்கவேண்டும்.

பொடித்த வெல்லத்தை அதில் சேர்க்க வேண்டும்.

வெல்லத்தை பாகு காய்ச்சியும் சேர்த்துக்கொள்ளலாம். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து வடித்துக்கொள்வது வெல்லத்தில் உள்ள தூசிகளை வடிக்க உதவும்.

பலாப்பழ பேஸ்ட் மற்றும் வெல்லத்துடன் சேர்த்து நன்றாக கலந்து சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

இப்போது கெட்டியான தேங்காய்ப்பாலை சேர்க்க வேண்டும்.

அனைத்தையும் நன்றாக கலந்து, வறுத்த முந்திரி மற்றும் தேங்காய் பற்கள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.

தற்போது பலாப்பழ பாயாசம் சாப்பிட தயாராக உள்ளது.

குறிப்புகள்

உங்களுக்கு தேவைப்பட்டால் 2 ஏலக்காயை பொடித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏலக்காய் சேர்க்காவிட்டால், பலாப்பழத்தின் சுவை அதிகம் இருக்கும்.

தேங்காய் பாலுக்கு பதில் பசும்பாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தேங்காய்ப்பால்தான் சிறந்தது.

பாயாசம் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

பாயாசத்தின் இனிப்பு சுவைக்கு ஏற்ப வெல்லத்தை சரிசெய்ய வேண்டும்.

இதை சூடாகவும், ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

100 கிராம் பலாப்பழத்தில் கலோரிகள் 94, கொழுப்பு 0.3 மில்லி கிராம், நார்ச்சத்துக்கள் 2 கிராம், புரதம் 1 கிராம், பொட்டாசியம் 303 மில்லிகிராம், கால்சியம் 34 மில்லிகிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், ஃபோலேட் 14 மைக்ரோகிராம், இரும்புச்சத்துக்கள் 0.6 மில்லிகிராம் உள்ளது.

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, தியாமின், ரிபோஃப்ளாவின், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், சிங்க் மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் உள்ளன. மற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

பலாப்பழம் உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது. கண் பார்வையை கூராக்குகிறது. வயோதிகத்தை தடுக்கிறது. எலும்பை பலப்படுத்துகிறது. ரத்ததின் தரத்தை அதிகரிக்கிறது. ஆஸ்துமாவை தடுக்கிறது. தைராய்டு சரியாக இயங்குவதை உறுதிப்படுத்துகிறது. சரும வியாதிகளை சரிசெய்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி