தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Rasam: ‘தேவாமிர்தத்தை மிஞ்சும் தக்காளி ரசம்..’ விலை குறைந்ததும் ட்ரை பண்ணுங்க!

Tomato Rasam: ‘தேவாமிர்தத்தை மிஞ்சும் தக்காளி ரசம்..’ விலை குறைந்ததும் ட்ரை பண்ணுங்க!

Jul 11, 2023, 05:56 PM IST

google News
Rasam: தக்காளி சட்னி இருக்கா? தக்காளி சாதம் இருக்கா? தக்காளி கூட்டு இருக்கா? என வீம்புக்கு தக்காளி வகைகளை கேட்டு, வாங்கிக் கட்டிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (the_temptationalley Instagram)
Rasam: தக்காளி சட்னி இருக்கா? தக்காளி சாதம் இருக்கா? தக்காளி கூட்டு இருக்கா? என வீம்புக்கு தக்காளி வகைகளை கேட்டு, வாங்கிக் கட்டிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Rasam: தக்காளி சட்னி இருக்கா? தக்காளி சாதம் இருக்கா? தக்காளி கூட்டு இருக்கா? என வீம்புக்கு தக்காளி வகைகளை கேட்டு, வாங்கிக் கட்டிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘தக்காளி விக்கிற விலையில் தக்காளி ரசம் கேட்குதா… தக்காளி ரசம்…’ என நீங்கள் கேட்பது எங்களுக்கும் கேட்கிறது. என்ன செய்ய, எப்போதுமே எட்டாத ஒரு விசயம் மீது தான் ஈர்ப்பு அதிகம் இருக்கும். அந்த வகையில், 10 கிலோ 50 ரூபாய்க்கு தக்காளி விற்கும் போது வராத ஈர்ப்பு, இப்போது தான் பலருக்கும் வந்திருக்கம். 

தக்காளி சட்னி இருக்கா? தக்காளி சாதம் இருக்கா? தக்காளி கூட்டு இருக்கா? என வீம்புக்கு தக்காளி வகைகளை கேட்டு, வாங்கிக் கட்டிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதெல்லாம் விடுங்க, தக்காளி ரசம் எப்படி வைக்கலாம் என்று பார்க்கலாம். புளி, பருப்பு இல்லாமல் எளிமையாக செய்யக் கூடிய இந்த ரசம், பயங்கர ருசி கொண்டது. 

தக்காளி ரசத்திற்கு தேவையான பொருட்கள் இதோ:

  • தக்காளி 3
  • பூண்டு 8 பல்
  • தண்ணீர் 2 க்ளாஸ்
  • மிளகு 2 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு 1 டீ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 2
  • பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய் அரை குழி கரண்டி

செய்முறை பார்க்கலாம்:

தக்காளியை பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். மசியும் வரை பிசைந்து விட்டு, மேல் தோலை எடுத்துவிடவும். பற்ற வைத்த அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின், கடுகு , காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கருவேப்பிலை போட்டு நன்கு வதக்க வேண்டும். 

கரைத்து வைத்த தக்காளி கரைசலை அதனுள் ஊற்ற வேண்டும். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு லேசாக கிண்டவும். ரசத்தை கொதிக்கவிடாமல் லேசாக நுரை வந்ததும் இறக்கிவிட வேண்டும். அதற்கு முன் இடித்து வைத்த பூண்டு, இடித்து வைத்த சீரகம், இடித்து வைத்த மிளகு, இடித்து வைத்த கருவேப்பிலை ஆகியவற்றை அதனுள் போட வேண்டும். 

ஒரு கொதியில் ரசத்தை இறக்கவும். இறக்கும் முன் கொத்த மல்லி இலை கொஞ்சம் போட்டு இறக்கிட வேண்டும். தேவையென்றால் கொஞ்சம் கருவேப்பிலையும் சேர்த்து கொள்ளலாம். இறக்கிய ரசத்தின் மேல் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றினால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். 

இப்போது கமகம தக்காளி ரசம் ரெடி. அசைவ உணவுகளுக்கும் சரி, சைவ உணவுகளுக்கும் சரி இந்த ரசம் காம்போ அசத்தலான உணவாக இருக்கும். எளிய செய்முறை தான். வீட்டில் முயற்சித்தால் ருசியான தக்காளி ரசத்தை நீங்கள் உண்டு மகிழலாம். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி