சண்டே ஸ்பெஷல் சிக்கன் கறி! வெள்ளை சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படி? பக்கா ரெசிபி இதோ!
Nov 10, 2024, 10:10 AM IST
வித்தியாசமாக செய்யப்படும் உணவு வகைகள் ஆச்சரியத்தை தரும். அப்படி ஒரு உணவு தான் வெள்ளை சிக்கன் கறி, இந்த வெள்ளை சிக்கன் கறி செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
ஞாயிறு கிழமை என்றாலே நமது வீடுகளில் சிக்கன், மட்டன் என சமையல் தூள் பறக்கும். அதிலும் விடுமுறை தினம் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். எப்போதும் செய்யப்படும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி ஆகியவை சில சமயங்களில் போராடிப்பதும் உண்டு. அவர்களுக்கு வித்தியாசமாக செய்யப்படும் உணவு வகைகள் ஆச்சரியத்தை தரும். அப்படி ஒரு உணவு தான் வெள்ளை சிக்கன் கறி, இந்த வெள்ளை சிக்கன் கறி செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
4 டீஸ்பூன் எண்ணெய்
1 வளைகுடா இலை
3 கிராம்பு
2 ஏலக்காய்
1 வெங்காயம்
1/2 கிலோ எலும்பு கோழி
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
5 பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
1.5 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
அரை டீஸ்பூன் கரம் மசாலா
1 உருளைக்கிழங்கு
1/2 கேரட்
3 டீஸ்பூன் பச்சை பட்டாணி
3 டீஸ்பூன் மக்கா சோளம்
தேவையான உப்பு
1 டீஸ்பூன் பாப்பி விதைகள்
8 முந்திரி
1 கப் துருவிய தேங்காய்
தண்ணீர்
1 டீஸ்பூன் மிளகு தூள்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
முதலில் ஒரு காடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இந்த எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு நன்கு வறுக்கவும். இவை வதங்கியதும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். இந்த வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் சிக்கன் போட வேண்டும். இந்த சிக்கன் நன்றாக வறுபடும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கி அரைத்து பேஸ்ட் ஆக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இஞ்சி பூண்டு பேஸ்டை சிக்கனுடன் சேர்க்க வேண்டும். மேலும் 5 பச்சை மிழகாய்களை கீறி போட வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும், அதில் ஒன்றரை டீஸ்பூன் மல்லித் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
இப்பொழுது இதில் காய்கறிகளை சேர்க்க வேண்டும். முதலில் ஒரு உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய கேரட்டையும் சேர்த்து வதக்க வேண்டும். மேலும் பச்சை பட்டாணி மற்றும் ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் 2 முதல் 3 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர் இதில் தேங்காய்பால் சேர்க்க வேண்டும். மேலும் ஒரு மிக்சி ஜாரில் கசகசா மற்றும் 5 முந்திரி பருப்புகளை சேர்த்து அரைத்து இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.இதனை 5 நிமிடங்கள் வேக வேண்டும். பின்னர் மேலும் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது சுவையான வெள்ளை சிக்கன் குழம்பு ரெடி. இறுதியாக இதில் கொத்தமல்லியை தூவி விட்டு பரிமாறவும்.
டாபிக்ஸ்