Instant Poha Idly: இன்ஸ்டண்ட் இட்லி செய்வது எப்படி?மாவு புளிக்கும் வரை வெயிட் பண்ண வேண்டாம்!
Sep 20, 2024, 05:20 PM IST
வேலைக்குசெல்லும் பெண்கள் தொடங்கி பேச்சுலரஸ் வரை அனைவரும் உடனடியாக சமையல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். போதிய நேரமின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு மாற்றாக கடைகளில் விற்கும் இன்ஸ்டண்ட் ரெசிபி உள்ள உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்து உள்ளது.
நாம் அனைவரும் காலை வேளையில் உணவாக இட்லியை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். மிகவும் நல்ல உணவாகவும் இட்லி இருந்து வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் தொடங்கி பேச்சுலர்ஸ் வரை அனைவரும் உடனடியாக சமையல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். போதிய நேரமின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கு மாற்றாக கடைகளில் விற்கும் இன்ஸ்டண்ட் ரெசிபி உள்ள உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் இட்லி செய்யத் தேவையான மாவிற்க்கு, ஆரிசி உளுந்து ஊற வைத்து பொறுமையாக செய்ய முடியாது. எனவே, இன்ஸ்டண்ட் ஆக இட்லி செய்யும் எளிய முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் அவுல், ஒரு கப் இட்லி ரவை, ஒரு கப் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பேக்கிங் சோடா சிறிதளவு, இரண்டரை கப் தண்ணீர். ஒரு சின்ன பல்லாரி வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
முதலில் ஒரு கப் அவலை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்திருந்த ஒரு கப் இட்லி ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து ஒரு கப் தயிர், இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, பேக்கிங் சோடா போட்டு கலக்க வேண்டும்.
இந்த கலவையை ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி மூடி வைக்க வேண்டும். ஐந்தில் இருந்து பத்து நிமிடங்களில் இட்லி வெந்து முடிந்ததும் இட்லியை எடுக்க வேண்டும். அவுல் இல்லாத சமயத்தில் ரவையை மட்டும் வைத்தே இந்த சுவையான இட்லியை தயார் செய்யலாம். கலவை சற்று அளவுகளை மாற்றி டிரை செய்து பார்க்கலாம்.
இன்ஸ்டண்ட் சட்னி இலவசம்..
இந்த இன்ஸ்டண்ட் இட்லி மட்டும் இல்லாமல் எல்லா இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிட சுவையான இன்ஸ்டண்ட் சட்னி தெரியுமா? வாங்க பாக்கலாம். முதலில் ஒரு பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, 1 தக்காளி ஆகியவற்றை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு உடன் சிறிதளவு சீரகம், சிறிய அளவிலான வெல்லத்தையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து பருப்பு சிறிதளவு விட்டு பொரிய விட வேண்டும். இறுதியாக அரைத்து வைத்து இருந்த சட்னி கலவையை எண்ணெயில் போட்டு 8 நிமிடங்கள் வதக்கவும். பச்சை வாடை போகவும் இன்ஸ்டண்ட் இட்லியுடன் இந்த சட்னியை பரிமாற சுவையான காலை உணவு ரெடி.
டாபிக்ஸ்