Carrot Dal Rice: குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு இத செஞ்சு கொடுங்க! மிச்சம் வைக்கவே மாட்டாங்க!
Sep 23, 2024, 02:38 PM IST
Carrot Dal Rice: பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த விதமான சாப்பாடு செஞ்சு கொடுத்தாலும் சரியா சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்து ருசியான சாப்பாட்டையும் செய்து கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்களது வளரும் பருவத்தில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தேவைப்படும். இத்தகைய பருவத்தில் அவர்கள் சரியாக சாப்பிடுவதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த விதமான சாப்பாடு செஞ்சு கொடுத்தாலும் சரியா சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்து ருசியான சாப்பாட்டையும் செய்து கொடுக்க வேண்டும். எனவே அவர்கள் விரும்பும் வண்ணத்தில் காய்கறிகள் சேர்த்து சமைத்து தர வேண்டும்.
குழந்தைகளுக்கு விட்டமின்களை தரும் காரட் மற்றும் புரதம் நிறைந்த பருப்பை வைத்து காரட் பருப்பு சாதம் சிறந்த சத்துக்களை தரும். இந்த காரட் பருப்பு சாதத்தை அவர்கள் விரும்பும் விதத்தில் செய்யும் முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
1. கால் கிலோ துவரம்பருப்பு
2. கால் டம்ளர் சாப்பாட்டு அரிசி
3. நான்கு கேரட்
4. நான்கு உருளைக்கிழங்கு
5. தேவையான அளவுஆயில்
6. தேவையான அளவு தண்ணிர்
7. தேவையான அளவு உப்பு
8. ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்
9. சிறிதளவு கொத்த மல்லி இலை
10. ஒரு பல்லாரி வெங்காயம்
11. இரண்டு பூண்டுப் பல்
12. சிறிதளவு இஞ்சி
13. இரண்டு தக்காளி
14. ஒரு டீஸ்பூன்நெய்
15. ஒரு பச்சை மிளகாய்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்க்க வேண்டும் . அதன் உடன் பல்லாரி வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து உருளை கிழங்கு, கேரட் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். உடன் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும் நன்கு கலந்து விடவும் உற வைத்து கழுவி வைத்த பருப்பு அரிசியை சேர்க்கவும்.
மல்லி இலை சேர்க்கவும் பிறகு கலந்து விடவும் பிறகு குக்கர் மூடியை போட்டு நன்கு குழைய வேகவிடவும். சாதம் நன்கு வெந்ததும் குக்கர் மூடியை திறந்து நெய் சேர்த்து கடைந்து விடவும். இப்போது சுவையான குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய கேரட் பருப்பு சாதம் தயார் செய்து சுவையாக சாப்பிடலாம்.
காரட்டின் பயன்கள்
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்கும். மேலும் காரத்தில் கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ ஆகிய சத்துக்கள் நிறைந்து உள்ளன.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன் பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்