Regional Recipe: சுவையான கேரள சிறப்பு உன்னியப்பம் செய்முறை
Jun 03, 2023, 11:37 AM IST
சுவையான கேரள சிறப்பு உன்னியப்பம் செய்முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உன்னியப்பம், அரிசி, வெல்லம், வாழைப்பழம், வறுத்த தேங்காய்த் துண்டுகள், வறுத்த எள், நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து தயாரிக்கப்படும் ஒரு சிறிய வட்ட சிற்றுண்டி. வாழைப்பழத்துக்குப் பதிலாக பலாப்பழத்தைப் பயன்படுத்தி இந்த பஞ்சுபோன்ற வறுத்த மாவின் மாறுபாடுகள் 90களின் பிற்பகுதியிலிருந்து பிரபலமானது. உன்னியப்பம் கேரளாவில் புகழ்பெற்ற சிற்றுண்டி.
உன்னியப்பம் ஓணம் சத்யா நோன்பு விருந்திலும் பரிமாறப்படுகிறது. கேரளாவில் உள்ள சில கோயில்களில் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
இதன் பெயரின் தோற்றம் மலையாள மொழியில் உள்ளது, அங்கு 'உன்னி' என்றால் 'சிறியது' மற்றும் 'அப்பம்' என்பது அரிசி கேக்கைக் குறிக்கிறது. கேரளாவைத் தவிர, கர்நாடகாவிலும் தென்னிந்தியாவில் இன்னும் சில பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த உன்னியப்பத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள். மலையாளிகளின் வீட்டு விசேஷங்கள், பண்டிகை நாட்களில் கட்டாயம் உன்னியப்பம் இடம் பெற்றிருக்கும்.
உன்னியப்பம் செய்யத் தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
சலித்த மாவு - 50 கிராம்
பச்சை வாழைப்பழம் - இரண்டு
பொடித்த வெல்லம் - 75 கிராம்
ஏலக்காய் பொடி - 20 கிராம்
சோடா மாவு (விரும்பினால்) ஒரு துளி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
நெய் - வறுப்பதற்குத் தேவையான அளவு.
உன்னியப்பம் செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து, ஊற வைத்து, கழுவி வைத்துக்கொள்ளவும்.
கரகரப்பான மாவாக அரைத்துக் கொண்டு, ஓரமாக வைக்கவும்.
வாழைப் பழங்களை மசித்து, ஓரமாக வைக்கவும்.
வெல்லத்தை குறைவான தண்ணீரில் உருக்கவும். குளிர விட்டு, வடிகட்டவும். வாழைப்பழம், உருக்கிய வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.
கொஞ்சம் நெய்யை சூடாக்கி, அதில் தேங்காய் துண்டுகளை பழுப்பாகும் வரை வறுக்கவும். அதை மாவுடன் சேர்க்கவும்.
உண்ணியப்பம் கடாயைச் சூடாக்கி, அதில் நெய்யை ஊற்றவும்.
மேசைக்கரண்டி அளவுள்ள மாவை, அதிலுள்ள குழிகள் முக்கால் அளவுக்கு நிரம்பும் வரை ஊற்றவும்.
கீழ் பகுதி, பொன்னிறமாகும் வரை சமைக்கவும், இப்போது திருப்பிப் போட்டு மறுபுறம் சமைக்கவும்.
சமைக்கப்பட்டவுடன் பேப்பர் நாப்கின் மூலம் நெய்யை மேலே பூசவும்.
சுடச்சுட பரிமாறுங்கள்.
டாபிக்ஸ்