Pepper Chicken: ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?
Oct 16, 2023, 07:16 PM IST
ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
தற்போது தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. குளிரும் மழையும் சேர்ந்து சீதோஷணம் சில்லிடுகிறது. இந்த காலகட்டத்தில் மழைக்காலத்தில் பரவும் நோய்களும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. அப்படி அதிகரிக்கும் சளியினை சமாளிக்க பெப்பர் சிக்கன் உட்கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதை எளிமையாக செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- அரைகிலோ சிக்கன்
- ஒரு தேக்கரண்டி ரிபைனுடு எண்ணெய்,
- 2 தக்காளி,
- 2 பல்லாரி வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 11/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
- சிறிதளவு மஞ்சள் பொடி.
செய்முறை: ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து, அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கிக்கொள்ளவும். மேலும் அதில் முன்பே நுறுக்கிவைத்திருந்த தக்காளிகளைப் போட்டு வதக்கவும்.
பின் அதன்மேல் உப்பினை சேர்த்துக்கொள்ளவும். இதனைத் தொடர்ந்து வெங்காயத்தையும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஐந்து நிமிடங்கள் வேக வைத்தபின், ஏற்கனவே எடுத்துவைத்த பச்சை மிளகாய், மிளகுத்தூள், சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை தயார் செய்த கலவையின்மேல் போட்டுக்கொள்ளவும். மேலும் இஞ்சி - பூண்டு பேஸ்டினையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும். இதனை 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அதனைத் தொடர்ந்து சுத்தப்படுத்தி வைத்திருந்த சிக்கனை, அந்த வாணலியில் சேர்க்கவும்.
பின் அதனை நன்கு கிளறிவிட்டு, வாணலியில் மூடிபோட்டு மூடிவிட்டு அரை மணிநேரம் வேக வையுங்கள். சிக்கன் நன்கு மென்மையாகி சுவையான பெப்பர் சிக்கன் தயார். இதனை நாம் தயார் செய்து வைத்திருந்த ரைஸூடன் சேர்த்து சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்