Hibiscus Juice : முடி கொட்டும் பிரச்சனை இருக்கா? அப்போ இனி தினமும் செம்பருத்தி ஜூஸ் போட்டு குடிங்க.. ஈஸியா செய்யலாம்!
Aug 08, 2023, 03:46 PM IST
முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் செம்பருத்தி ஜூஸ் தினமும் குடித்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
செம்பருத்தி ஜூஸ்
தேவையான பொருட்கள்
சிவப்பு செம்பருத்தி பூ - 10 முதல் 15 வரை
கிராம்பு - 4
எலுமிச்சை - 1
தண்ணீர் - 3 கப்
சர்க்கரை
ஐஸ் கட்டிகள்
செய்முறை
சிவப்பு செம்பருத்தி பூக்களின் இதழ்களை எடுத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மூன்று கிளாஸ் தண்ணீர் எடுத்து, கிராம்பு, செம்பருத்தி இதழ்கள் சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர் இதை வடிகட்டி ஆறவைத்து பின் ஒரு எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு சிவப்பு நிறமாக மாறுவதை நீங்கள் காணலாம். இதனை ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிக்கலாம்.
எப்போது ஜூஸ் வேண்டுமோ அப்போது சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நாம் காய்ச்சி எடுத்து வைத்த செம்பருத்தி சாறை சேர்த்து குடிக்கவும். இதில் அவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கிறது.
நன்மைகள்
செம்பருத்தி பூக்கள் அனைத்து விதமான கூந்தல் பிரச்னைகளுக்கும் அற்புதமான தீர்வாக இருக்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கூந்தலுக்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்கவும், வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்தவும் மற்றும் நீண்ட ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் செம்பருத்தி பூக்கள் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்தி பூக்கள் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. வழுக்கைத் திட்டுகளை நீக்கவும் செம்பருத்தி சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
செம்பருத்திப் பூக்களில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் கெரட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கெரட்டின் முடிக்கு ஒரு கட்டுமானத் தொகுதி போன்றது. இது முடியை பிணைக்கிறது. அதன் உடையக்கூடிய தன்மையைக் குறைக்கிறது. கூடுதலாக, இது முடி இழைகளின் ஒட்டுமொத்த தடிமனையும் மேம்படுத்துகிறது. எனவே கெரட்டின் சிகிச்சைக்கு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, அவர்களின் தலைமுடிக்கு செம்பருத்தியை பயன்படுத்துவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்