Chicken Shawarma: இனி வீட்டிலேயே செய்யலாம் சிக்கன் ஷவர்மா! சிம்பிள் ரெசிபி!
Oct 03, 2024, 12:33 PM IST
Chicken Shawarma: சிக்கனை வைத்து செய்யப்படும் சிக்கன் ஷவர்மா பெரும்பாலும் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவாக இருந்து வருகிறது. இதனை அதிகமான மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிக்கனை வைத்து செய்யப்படும் சிக்கன் ஷவர்மா பெரும்பாலும் ஹோட்டல்களில் விற்கப்படும் உணவாக இருந்து வருகிறது. இதனை அதிகமான மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.சில ஹோட்டல்களில் இந்த சிக்கன் ஷவர்மா சுத்தமான முறையில் செய்யப்படுவதில்லை. இதனை நாம் வீட்டிலேயே செய்து விடலாம். அதனை தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ எலும்பு இல்லாத சிக்கன், 2 கேரட், ஒரு வெள்ளரிக்காய், ஒரு குடை மிளகாய், ஒரு லெட்யூஸ்(lettuce), ஒரு பெரிய வெங்காயம், 2 கப் மைதா மாவு, ஒரு கப் வினிகர், அரை கப் வெஜிடபிள் எண்ணெய், 1 முட்டை, 25 கிராம் ஈஸ்ட், பூண்டு, சிறிதளவு டிஜான் கடுகு (Dijon Mustard), இரண்டு கப் தயிர் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்தக் கொள்ளவும். மேலும் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு சர்க்கரை, தேவையான அளவு எண்ணெய் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் காய்கறிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் வினிகர், சர்க்கரை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும். ஒரு அகன்ற பாத்திரத்தில், காரட், வெங்காயம், வெள்ளரிக்காய், குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி போடவும். பின்னர் செய்தி வைத்திருந்த வினிகர் கலவையை ஊற்றி ஊற வைக்கவும். ஈஸ்ட்டை சூடு தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் வைக்கவும். மாவு பிசையும் பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் அதில் ஈஸ்ட் கலந்த தண்ணீரை ஊற்றி நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் எண்ணெய் தடவி அப்படியே வைக்கவும். பின் அந்த மாவை சிறு துண்டுகளாக உருட்டி மீண்டும் ஊற விடவும். ஊறிய பின் சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தோசை சட்டியில் இரு பக்கமும் வேகுமாறு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்சியில் வெஜிடபிள் எண்ணெய், முட்டை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய பூண்டு, தேவையான அளவு உப்பு, கருப்பு மிளகு தூளை, எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி வினிகர், மற்றும் Dijon கடுகை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிக்கன், பூண்டு, வெள்ளை மிளகுதூள், கருப்பு மிளகு தூள், தேவையான உப்பு போட்டு கலக்கவும். பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தயிர், வினிகரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். பின் சிக்கன் கலவையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வினிகரில் ஊற வைத்த காய்கறிகளை போட்டு, அதனுடன் லெட்யூஸ், மயோனிசை போட்டு கலக்கவும். சுட்டு வைத்து இருக்கும் ரொட்டியில் மயோனிசை தடவி சிக்கணை வைத்து பரிமாறலாம்.
டாபிக்ஸ்