தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Super Recipe: செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

Super Recipe: செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil

May 28, 2023, 08:57 PM IST

google News
செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்:

ஆட்டு நெஞ்செலும்பு - 250 கி

துவரம்பருப்பு – 50 கி

வெங்காயம்– 1

முருங்கைக்காய் – 1

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

புளித் தண்ணீர் – 2 டீஸ்பூன்

தனியா தூள் – 4 டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

தக்காளி – 2

உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை – 1

சோம்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை – 1 கொத்து

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

கல் பாசி – சிறிது

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும்.

பின் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து, முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.

புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி